நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, May 30, 2024

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் பதவியில் மாற்றம் : வெளியான கருத்துக்கணிப்பு | Uk Next Prime Minister Possibilities


பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் பதவியில் மாற்றம் : வெளியான கருத்துக்கணிப்பு
பிரித்தானியாவை 14 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த கன்சர்வேட்டிவ் கட்சி சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்தது. அதே நேரத்தில், கன்சர்வேட்டிவ் கட்சி வசம் இருந்த இருக்கைகள் பலவற்றை லேபர் கட்சி கைப்பற்றியது.

ஆக, வரும் பொதுத்தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

லேபர் கட்சியை வழிநடத்திவருபவர், Keir Starmer.. Keir Starmer, 1962ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, லண்டனிலுள்ள Southwarkஇல், எளிமையான குடும்பத்தில் பிறந்துள்ளார்.

Uk Next Prime Minister Possibilities

அவரது தந்தையான Rodney Starmer கருவிகள் செய்பவர், தாய் Josephine ஒரு செவிலியர்.

Keir Starmer பின்னாட்களில் அரசியலில் நுழைந்து, அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் ஆனார். சட்டம் பயின்ற Keir Starmer, பின்னர் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சட்டத்தரணியாகியுள்ளார்.

உள்ளூர் தேர்தல்களில் நல்ல வெற்றி

எலிசபெத் மகாராணி கையால் ’Sir' பட்டம் பெற்ற Keir Starmer, 2015ஆம் ஆண்டு, 17,048 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும்பான்மை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Uk Next Prime Minister Possibilities

அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்பு, அவரது தாய் மரணமடைந்துவிட்டார்.

பல எதிர்ப்புகளுக்கிடையே மெல்ல முன்னேறி, 2020ஆம் ஆண்டு, லேபர் கட்சியின் தலைவரானார் Keir Starmer. 2021 முதல், லேபர் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை முந்தி, 2023 உள்ளூர் தேர்தல்களில் நல்ல வெற்றியைக் கண்டது.

சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களிலோ, கன்சர்வேட்டிவ் கட்சியின் இருக்கைகள் பலவற்றை லேபர் கட்சி கைப்பற்றி நிலையில் இவருக்கு அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment