வீடொன்றில் போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த யுவதியொருவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்த போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது ஹோமாகம (Homagama) பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பாதுக்க பஹல போபே குருன்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
போதைப் பொருள்
ஹோமாகம (Homagama) - ஹரிபிட்டிய பகுதியில் வீடொன்றில் இரண்டு நபர்களுடன் இணைந்து போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த குறித்த யுவதி, காவல்துறையினர் வீட்டை சுற்றி வளைத்த போது தப்பித்துக் கொள்ளும் நோக்கில் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.
Girl Jumped From The Floor In Colombo
இவ்வாறு குதித்த போது மதில் சுவரில் காணப்பட்ட இரும்பு கம்பிகள் வயிற்றில் பட்டதனால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர்
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த நபர் ஒருவரின் மனைவி தொலைபேசி மூலம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த ஏனைய இரண்டு ஆண்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment