யாழ்ப்பாண கடையில் ஒரு beginner ஆக எவ்வாறு வடை சாப்பிடுவது என்று பார்க்கலாம். முக்கியமாக சிறுவர்களுக்கும் வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருபவர்களுக்கும் கட்டாயம் இந்த அறிவு தேவையானது.
முதலாவது உங்களது சௌகரியத்திற்கு ஏற்ப ஒரு கடையினை தெரிவுசெய்து கொள்ளுங்கள். கடை பார்ப்பதற்கு சுத்தமானதாக இருக்க வேண்டும். இது முதலாவதாகும் அடுத்ததாக கடைக்குள் சென்று, கடையில் வேலை செய்பவரிடம் “அண்ணா வடை இருக்குதா” என்று முதலாவது கேட்க வேண்டும்
அடுத்ததாக “என்ன விலை அண்ணா” என்று கேட்க வேண்டும். சாப்பாட்டோட விலையே கேட்காமல் எதுவும் ஓடர் போடாதீர்கள் பிறகு orange juice 6000 இற்கு வாங்கிய கதையாக போய்விடும்.
அடுத்தாக வடை மேசைக்கு வந்த பிறகு சூடாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். காலையில் போட்ட வடையினை இரவும் விற்பனை செய்வார்கள் கவனமாக இருங்கள்.
அடுத்ததாக வடையின் structure இனைப்பாருங்கள் அது சரியான வடிவாக இருந்தால் கொஞ்சம் உசராக இருங்கள் ஏன் என்றால் வடையின் சரியான உருவத்திற்கு காங்கிரிட் போடுவது போல கம்பிளை வைத்து உருவத்தை வரவைத்து இருப்பார்கள் மற்றபடி கண்டிபடி இருந்தாலும் கவனமாக இருங்கள்.
அடுத்ததாக வடையினை அமுத்திப்பாருங்கள் மெதுவாக அமத்துங்கள் சிலசமயங்களில் உள்ளிருக்கும் கண்ணாடி கைகளை வெட்டக்கூடும்.
அடுத்ததாக வடையினை வாயில் வைத்து கடிக்க நினைத்தால் அது மிகவும் தவறு, கொஞ்சம் கொஞ்சமாக பிச்சு சம்பலுடன் தொட்டு தொட்டு மெதுவாக கடித்து சாப்பிடுங்கள்.
கடைசியாக சாப்பிடும் போது தேங்காய்ச்சிரட்டை, கல்லு, கம்பி, கண்ணாடி தூண்டு பீடித்துண்டு ஏதாவது வந்தால் அதனை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு சாப்பிடுங்கள்.
சாப்பிட்டு முடிஞ்ச பின்னர் அதற்கான காசினை கொடுத்துவிட்டு வந்துடுவிடுங்கள்.
அதனைவிட்டு PHI இற்கு அழைத்து சொன்னாலும் கடையிற்கு தற்காலிமாக சீல்வைப்பார்கள், கடை உரிமையாளர்கள் கடையினை மூடிவதாக போர்ட் ஒன்று வைத்துவிடுவார்கள்.
அவ்வளவு தான்.
யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கின்றது
0 comments:
Post a Comment