கனடாவின் (Canada) மொன்றியாலில் இடம்பெற்ற கத்தி கத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவமானது மொன்றியாலின் பிலாட்டியு மொன்ட் றோயல் போரோவ் (Montreal's Plateau-Mont-Royal borough) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 15, 23 மற்றும் 25 வயதான நபர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் தப்பியோட்டம்
ராச்செல் மற்றும் செயின்ட் அன்ட்ரே வீதிகளுக்கு இடையில் குறைந்தபட்சம் பதினைந்து பேர் மோதிக் கொண்டதாக 911 என்ற காவல்துறை அவசர அழைப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
3 People Dead In Stabbing Attack Montreal Canada
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் மோதலுடன் தொடர்புடையவர்களே கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் குறித்த நகரில் இடம்பெற்ற 14ம், 15ம் மற்றும் 16ம் மரணங்கள் இவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment