மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்படவுள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு (US Dollar) நிகரான இலங்கை ரூபாயின் (Sri Lanka Rupee) மதிப்பு வலுவடைந்து வருவதால் எரிபொருள் விலை குறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் நீண்ட விடுமுறை வார இறுதி காரணமாக எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நுகர்வு
அதன்படி 50 வீதத்தால் எரிபொருள் நுகர்வு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா (Covid-19) தொற்று பரவியதன் பின்னர் இவ்வருடம் வெசாக் காலத்தில் அதிக எரிபொருள் நுகர்வு இடம்பெற்றுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் இருப்பதால் தட்டுப்பாடு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment