நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, May 30, 2024

தாயக சமூக சீரழிவுகளை தடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற இரும்புக் கரங்களே தேவை: விக்னேஸ்வரன் | C V Vigneswaran Talks About Ltte


தாயக சமூக சீரழிவுகளை தடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற இரும்புக் கரங்களே தேவை
எமது தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C.V Wigneswaran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் (Jaffna)  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் வடக்கின் முதலமைச்சராக இருந்திருந்தால் பாடசாலை மாணவிகளுக்கு எதிராக இன்று மேற்கொள்ளப்படும் தகாத முறைகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்திருப்பேன்.

தமிழ் மக்கள்

அத்தோடு, வடக்கு மாகாணத்தில் இன்று இவ்வாறான சீர்கேடுகள் இடம்பெறுவது வெட்கித் தலை குனியும் படியான விடயமாகவே இருக்கின்றது.

C V Vigneswaran Talks About Ltte

ஏனெனில், தமிழ் மக்கள் ஒழுக்கமான இனமாக இருந்தவர்கள் அத்தோடு அவ்வாறே கருதப்பட்டவர்கள் ஒரு பெண் நள்ளிரவில் நகைகளை அணிந்துகொண்டு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சென்றுவரக்கூடிய நிலை என்று தோற்றம் பெறுகின்றதோ அன்றுதான் எமக்குச் சுதந்திரம் என்று மகாத்மா காந்தி சொன்னார்.

தமிழீழ விடுதலைப் புலி

கிட்டத்தட்ட அவ்வாறான நிலை தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்த நிலையில் இப்பொழுது அனைத்தும் மாறிவிட்டது.

இன்று போதை தலை விரித்தாடுகின்றது அத்தோடு இராணுவத்தினர், கடற்படையினர், காவல்துறையினர் மற்றும் வான்படையினர் வடக்கில் முகாமிட்டிருந்தும் போதைப்பொருள்கள் எந்தத் தடையும் இல்லாமல் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன.

சீர்கெட்டுப்போயுள்ள இந்த சமூகத்தை மீட்பதற்கு இரும்புக்கரம் தேவை” என அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment