மின்சார திருட்டு தொடர்பாக மூன்று வயது குழந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பெஷாவர் மின்சார விநியோக நிறுவனம் (PESCO) மற்றும் நீர் மற்றும் மின்சார மேம்பாட்டு ஆணையம் (WAPDA) அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மூன்று வயதுடைய சிறுவன் மின்சாரத் திருட்டில் ஈடுபட்டதாக நிறுவனம் குற்றம் சாட்டியது.
குழந்தை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை அடுத்து குடும்பத்தினருக்கும் தகவல் கிடைத்தது. பின்னர் குழந்தை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
குழந்தையின் வயதைக் குறிப்பிட்டு வழக்கறிஞர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்ததையடுத்து, வழக்கை நீதிபதி ரத்து செய்தார்.
பாகிஸ்தானில் மின் திருட்டு அதிகளவில் நடக்கிறது. கடந்த மாதம், திருட்டு காரணமாக தேசிய கருவூலத்திற்கு பாகிஸ்தானிய பணமதிப்பில் ரூ.438 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானது. இதன் பின்னர் வருடாந்த இழப்பு 723 பில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டது.
0 comments:
Post a Comment