நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, May 21, 2024

மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் : காவல்துறையின் காவலில் இருந்த இளைஞன் படுகொலை..! | A Youth In Police Custody Was Murdered


மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் : காவல்துறையின் காவலில் இருந்த இளைஞன் படுகொலை..!
 பேலியகொட(peliyagoda) குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவத்தில் மினுவாங்கொடை, ஹொரம்பல்ல, வெரகொடமுல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மோட்டார் சைக்கிள் திருத்துவதற்காக

குறித்த இளைஞன் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்வதற்காக மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்திற்குச் சென்றுள்ளார் . சென்றவர் மறு நாள் காலை வரை வீடு திரும்பவில்லை என்பதால் அவரது தந்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் .

முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞன் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர் . எனினும் பின்னர், இந்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக பேலியகொட காவல்துறையிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாக மினுவாங்கொடை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இளைஞனின் தந்தைக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டபோது தனது மகன் அலைபேசியில் அழும் சத்தம் கேட்டதாக தந்தை தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் அறிவிப்பு

இதனையடுத்து கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி சட்டத்தரணி ஒருவருடன் உயிரிழந்த இளைஞனின் உறவினர் ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஏப்ரல் 25 ஆம் திகதி இளைஞன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் எனவும் இவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை , சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு தந்தை கோரியபோது நீதிமன்றில் முற்படுத்திய பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கவுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக

எனினும், அவரது உடல் நிலை ஆபத்தான நிலையிலிருந்ததால் இளைஞனைக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதனைதொடர்ந்து இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்தபோது வைத்தியர்கள் இளைஞனைப் பரிசோதித்த போது இவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் .

A Youth In Police Custody Was Murdered

அத்துடன் இளைஞனின் மரணத்தின் பின்னர் இவர் தொடர்பில் மினுவாங்கொடை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்ட சில உண்மைகள் பொய்யானவை என தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணை அதிகாரிகளின் கொடூரமான தாக்குதல்களினால் இளைஞன் உயிரிழந்துள்ளதாக இளைஞனின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 பிரதி காவல்துறை மா அதிபரின் அறிவிப்பு

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு இந்த விடயம் தொடர்பிலான உண்மைகள் கண்டறியப்படும் என பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ(Nihal Talduwa) தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த காலத்தில் யாழ்ப்பாணம்(jaffna) சுன்னாகம் காவல்துறையின் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job