யாழில் ஏ.எல் மாணவியின் வீட்டு அலுமாரிக்குள் பகலில் பிடிபட்ட காதலன்! அடி தாங்க முடியாமல் கழுத்தறுக்க முயற்சி!! மாணவி ஏ.எல் சிறப்பு சித்தி
யாழ் வலிகாமம் பகுதியில் அரச உத்தியோகத்தர்களான தம்பதிகளின் வீட்டின் அலுமாரிக்குள் இருந்து 20 வயது இளைஞன் பிடிபட்டு நையப்புடைக்கபட்டுள்ளான். இச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. அரச உத்தியோகத்தர்களான கணவனும் மனைவியும் அலுவலகத்திற்கு சென்ற பின் வீட்டில் பிரபல பாடசாலையில் கற்று இவ்வருடம் ஏ.எல் எடுத்த 20 வயதான மாணவி தனியே இருந்துள்ளார். மாணவி தனியே இருக்கும் போது வீட்டிற்குள் இளைஞன் ஒருவன் புகுந்ததை அயலவர் ஒருவர் பார்த்துள்ளார். அதனையடுத்து வீட்டுக்குள் இனந்தெரியாத இளைஞன் புகுந்துள்ள விடயத்தை மாணவியின் தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அலுவலகத்தில் இருந்து விரைந்து வந்த தந்தை வீட்டிற்குள் யாரோ புகுந்ததாக மாணவியிடம் கேட்ட போது மாணவி அதை மறுத்துள்ளார். வீட்டுக்குள் புகுந்து தேடிய போதும் யாரும் அகப்படவில்லை. இதனையடுத்து மீண்டும் அயலவரின் உதவியுடன் தேடுதல் முடக்கப்பட்டது. அதன் போதே மாணவியின் அறைக்குள் இருந்த சுவருடன் சேர்த்துக் கட்டப்பட்ட அலுமாரிக்குள் இருந்து இளைஞன் பிடிபட்டுள்ளான். மாணவியின் தந்தை மற்றும் அயலவர் குறித்த இளைஞனை தாக்கத் தொடங்கவே மாணவியும் இளைஞனும் அவர்களை வெளியே வைத்து பூட்டி விட்டு அறைக்குள் இருந்து தற்கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தியதாகத் தெரியவருகின்றது. அதே நேரம் வேறு அயலவர்களும் அங்கு கூடியுள்ளனர். இதனையடுத்து மாணவி அறைக்குள் இருப்பவர் தன்னுடன் கல்வி கற்பவர் என்றும் தாங்கள் காதலிப்பதாகவும் கத்த தொடங்கியுள்ளார். சம்பவம் அறிந்து அலுவலகத்தில் வேலை செய்த தாயும் அங்கு வந்த பின் நிலமை இன்னும் மோசமாகியது. தாய் தனது சகோதரர்களை அங்கு கூட்டி வந்து சண்டித்தனத்தில் இறங்கத் தொடங்கினார். கதவு உடைக்கப்பட்டு மாணவியும் காதலனும் வெளியே இழுத்து வரப்பட்டனர்.
தாயின் சகோதரர்களால் மாணவன் நையப்புடைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. அவர்களிடமிருந்து அடி வாங்கியபடி இன்னொரு அறைக்குள் ஓடிய காதலன் அறையைப் பூட்டியுள்ளான். அதன் பின்னர் அங்கு காணப்பட்ட கூரான பொருள் ஒன்றினால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தத் தொடங்கினான். மாணவியும் கத்தி்க் குளறி தற்கொலை அச்சுறுத்தல் விட்டதாக தெரியவருகின்றது. நீண்ட நேர இழுபறியின் பின் மாணவனின் பெற்றோர் அங்கு வரவழைக்கப்பட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலைக்கு இரு தரப்பினரும் சென்றுள்ளனர். அதன் பின்னர் கடும் எச்சரிக்கையுடன் காதலன் வீட்டிலிருந்து பெற்றோருடன் அனுப்பபட்டதாகத் தெரியவருகின்றது.
காதலனும் யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் ஏ.எல் எடுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது. அத்துடன் அவனது தந்தை பேக்கரி ஒன்றின் உரிமையாளர் என அறிய முடிகின்றது. இன்று வெளியாகிய ஏ.எல் பரீட்சை பெறுபேறுகளின்படி மாணவி உயிரியல் பிரிவில் சிறப்பான சித்திபெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. அவளது காதலனின் பெறுபேறு அறிய முடியவில்லை.
0 comments:
Post a Comment