பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு முயற்சியாக பிரித்தானிய (United Kingdom) அமைச்சர்கள் ஆங்கிலப் புலமை இல்லாத புலம்பெயர்ந்தோருக்கு சிக்கலை உருவாக்கும் ஒரு அதிரடி நடவடிக்கைக்கு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், ஏற்கனவே பிரித்தானியா (United Kingdom) சர்வதேச மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமைச்சர்களின் திட்டம்
இந்நிலையில், பிரித்தானியாவில் படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகள் கூட, பிரித்தானியாவில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டுமானால், அதற்கு தகுதி பெற, ஆங்கில மொழித் தேர்வுகள் எழுதி வெற்றிபெறவேண்டும் என்ற விதியை பிரித்தானிய அமைச்சர்கள் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
New Problem For Immigrants In Uk
இதேவேளை, ஆங்கிலப் புலமை கொண்ட, மிகச்சிறந்த சர்வதேச மாணவர்களை மட்டுமே பிரித்தானியாவில் தக்கவைத்துக்கொள்ளவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment