கனடாவில் உணவகம் ஒன்றில் பணியாற்றிய பெண்களிடம் மோசமான நடந்து கொண்ட தமிழ் இளைஞர் ஒருவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
Oshawa பகுதியிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றிய 38 வயதான ஜெயராம் சிவஞானசுந்தரம் மீது ஐந்து பா லியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவருக்கு எதிராக மூன்று உடலியல் வன்கொ டுமைகள், இரண்டு உடலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடலியல் பலாத்காரம்
எனினும் நீதிமன்றில் அவருக்கு எதிரான குற்றங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. குறித்த உணவகத்தில் பணியாற்றிய இரண்டு முன்னாள் ஊழியர்கள் தங்கள் மேலாளர் தங்களை உடலியல் பலாத்காரம் செய்ததாக முறைப்பாடு செய்தனர்.
Tamil Man Arrested In Canada
அதற்கமைய கடந்த மார்ச் மாதம் முதல் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்தனர். ராம் என அழைக்கப்படும் ஜெயராம் தற்போது. இன்னுமொரு உணவகத்தில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொரன்ரோவின் பல பகுதிகளிலுள்ள உணவகங்களில் அவர் பணியாற்றலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபரினால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
குறித்த இளைஞனை அடையாளம் காணும் வகையில் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment