விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ibrahim Raisi) இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை, விபத்தில் உயிரிழந்த அதிபர் மற்றும் அவருடன் பயணித்த ஏனையவர்களுக்காக 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கமேனி அறிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மூன்றாம் இணைப்பு
ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் உட்பட்டவர்கள் பயணித்த உலங்கு வானூர்தியின் படங்களை அரசு செய்தி நிறுவனம் வெளியட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் உட்பட்டவர்கள் பயணித்த உலங்கு வானூர்தியை கண்டுபிடித்ததாக மீட்பு பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment