லண்டன் தெருக்களில் சாரத்துடன் வலம் வந்த இளம்பெண் குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.
ஆள் பாதி ஆடை பாதி என்று பழமொழியே உள்ளது. தற்போதைய காலத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு உடைகளுக்கு பழக்கப்பட்டு விட்டனர். அதிலும் பெண்கள் ஆண்கள் அணியும் சேர்ட் மற்றும் ரீ சேட் போன்றஉடைகளை அடிவது பாக்ஷனாகி விட்டது.
இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் தெருக்களில் ஒரு பெண் லுங்கி அணிந்து நடந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக லண்டனில் வசிக்கும் இந்தியத் தமிழரான வலேரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
வீடியோவில், வலேரி ஸ்டைலாக நீல நிற செக்டு லுங்கியும் டி-ஷர்ட்டும் அணிந்து லண்டன் தெருக்களில் நடந்து சென்று ஒருசூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைகிறார்.
இந்நிலையில் அவரது வித்தியாசமான தோற்றத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர். இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வலேரியின் முயற்சியை பாராட்டினர்.
அவரின் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.
0 comments:
Post a Comment