உலகின் மிக உயரம் கொண்ட சிகரமான எவரெஸ்ட்(Everest) சிகரத்தை இரண்டே வாரத்தில் மூன்று முறை ஏறிய நபர் என்ற சாதனையை நேபாளத்தை சேர்ந்த பெண்ணொருவர் படைத்துள்ளார்.
நேபாள(Nepal) மலையேறும் புகைப்படப் பத்திரிக்கையாளரான பூர்ணிமா ஷ்ரேஸ்தா(Purnima Shrestha) என்ற பெண்ணே இந்த சாதனையை படைத்துள்ளார்.
சுமார் 8,848.86 மீட்டர் உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்தை இவர் முதலில் மே 12 ஆம் திகதி அடைந்தார்.
நான்காவது சாதனை
இதனையடுத்து, மீண்டும் அவர் மே 19 ஆம் திகதி பசாங் ஷெர்பாவுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம்(25) காலை 5:50 மணிக்கு மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை பூர்ணிமா அடைந்துள்ளார்.
Nepal Woman Sets Record Climbing Everest 3 Times
அத்துடன், குறித்த பெண் 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ள நிலையில், இது அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் நான்காவது முறை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவர் மனாஸ்லு, அன்னபூர்ணா, தௌலகிரி, கஞ்சன்ஜங்கா, லோட்சே, மகலு மற்றும் மவுண்ட் கே2 உள்ளிட்ட உயரமான பல மலை சிகரங்களை வெற்றிகரமாக எறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment