This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 31, 2024

எல்லோரும் என்னை வைச்சு செய்யுறாங்க நீ வாடா .. ” என அழைத்தால் வந்தேன்!! அர்ச்சுனாவின் நண்பன் கூறுவது என்ன?


எல்லோரும் என்னை வைச்சு செய்யுறாங்க நீ வாடா .. ” என அழைத்தால் வந்தேன்!! அர்ச்சுனாவின் நண்பன் கூறுவது என்ன?

பலர் இன்று அருச்சுனாவால் துரோகி என கூறப்பட்டதன் பின்னால் பெரும் சக்தி ஒன்று உள்ளது. அவர்கள் அருச்சுனாவிற்கு பாரிய குழி வெட்டுகின்றனர் என வைத்தியர் அருச்சுனாவின் நண்பரும் , வைத்தியரின் சுயேட்சை குழு உறுப்பினருமான சி. மயூரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வைத்தியர் அருச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்த கால பகுதியில் நெருக்கடிகளை சந்தித்த போது அவர் நலன் சார்ந்து நானும் எங்கள் நண்பர்கள் சிலருமே செயற்பட்டோம். தற்போது புது புதுசாக சேர்ந்து கொண்ட சிலராலேயே பிரச்சனைகள் உருவாகியுள்ளன. அதனால் மக்கள் சரியான துரோகிகளை இனம் காண வேண்டும்

அருச்சுனாவிற்கு பெயர் புகழ் வர முதலே அவரை பாதுகாக்க வேண்டும் என ஓடிக்கொண்டிருந்தோம். புகழ் , மக்கள் செல்வாக்கு வந்த பிறகு இணைந்து கொண்டவர்கள் அல்ல நாம்

தேர்தலில் நிற்க போவதாக அறிவித்த போது , நான் கேட்டேன். நீ தேர்தலில் நிற்கிறாயா ? என “ஓம். எல்லோரும் என்னை வைச்சு செய்யுறாங்க நீ வாடா .. ” என சொன்னார். அதற்கு பிறகு நான் வெளிநாட்டில் இருந்து உடனேயே  இலங்கை வந்து , வேட்புமனுவில் கையெழுத்திட்டேன்.  அதன் பிறகு தான் பல சர்ச்சைகளுக்குள் எங்களை இழுத்து விட்டிருக்கு.

வேட்புமனு தாக்கல் செய்த 11ஆம் திகதியில் இருந்து , இன்றைக்கு 31ஆம் திகதி வரையிலான கடந்த 20 நாட்களில் அருச்சுனாவின் உண்மையான நலன்விரும்பிகளிடம் இருந்து பிரிக்கப்பட்டார்.

அருச்சுனாவின் நலன் விரும்பிகளாக இருந்த பலர் இன்று அருச்சுனாவால் துரோகி என கூறப்பட்டதன் பின்னால் பெரும் சக்தி ஒன்று உள்ளது என்பதனை நான் பகிரங்கமாக கூறுகிறேன்.

யாரோ ஓர் இருவரை நம்பி அருச்சுனா தனக்கு நல்லது நடக்கும் என நினைக்கிறார். அவ்வாறு நடந்தால் எமக்கு சந்தோசம் ஆனால் எனது பார்வையில் அருச்சுனாவிற்கு பெரும் குழி வெட்டுகின்றனர். கூட நின்று குழி வெட்டி விழுத்திய பின்னர் அவரை மீட்க போவதும் நாமே …

அருச்சுனா ஆரம்பத்தில் கையில் எடுத்துக்கொண்ட பிரச்சனை ,இன்றும் பிரச்சனையாகவே இருக்கின்றது. அந்த பிரச்சனைக்கு தீர்வு காண மக்கள் ஆர்வம் காட்டுகின்றார்கள்

எல்லோரும் என்னை கேட்கின்றார்கள் , “நீயேன் இதில வந்து நிற்கிறாய் ?” என , அருச்சுனா என் நண்பன் என்பதற்காக நான் இதில் வந்து நிற்கவில்லை. அருச்சுனா கையில் எடுத்துக்கொண்ட விடயமான ஊழல் , அநியாயம் , கவனமின்மை , இந்த விடயங்களை தீர்க்கும் முகமாகவே நான் இதற்குள் வந்தேன்.அதில் நான் உறுதியாக நிற்கிறோம் அருச்சுனா எம்மை துரோகி என அறிவித்தாலும்  நாம் அவருக்காக நிற்போம் என மேலும் தெரிவித்தார்.

யாழில் கணவன், மனைவியைக் கொங்கிறீட் கல்லால் நசுக்கிக் கொன்றவர்கள் இவர்கள்தான்!! பொலிசார் பரபரப்பு தகவல்!!


யாழில் கணவன், மனைவியைக் கொங்கிறீட் கல்லால் நசுக்கிக் கொன்றவர்கள் இவர்கள்தான்!! பொலிசார் பரபரப்பு தகவல்!!

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன் மற்றும் மனைவி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த கணவனும், மனைவியும் கொங்கிறீட் கற்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றுக் காலை(30) சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

மூவர் சேர்ந்து தம்பதி படுகொலை
இந்தக் கொலையை மூவர் சேர்ந்து செய்ததாக பொலிஸாருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கொலையாளிகள் மூவரில் இருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் தலைமறைவாகியுள்ளார். கொலையுண்ட மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 54), அவரது மனைவி சுப்பிரமணியம் மேரி ரீட்டா (வயது 53) ஆகியோர் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

இந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விடுதியின் துணிகளை ஒப்பந்த அடிப்படையில் துவைப்பதற்காக ஏலத்தில் பெற்றுள்ளனர்.

இதன் காரணமாகத் தொழில் ரீதியில் ஏற்பட்ட போட்டியால் மூவர் சேர்ந்து தம்பதியினரைப் படுகொலை செய்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர் ஏற்கனவே இரு கொலைகளுடன் தொடர்பட்ட சந்தேகநபர் என்றும், அவருக்கு எதிரான வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கைதான கொலைச் சந்தேகநபர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்

சிறைக்குள் முன்னாள் போராளிகளின் தலையில் துப்பாக்கி வைத்த முன்னாள் அமைச்சர் கைதானது ஏன்?


சிறைக்குள் முன்னாள் போராளிகளின் தலையில் துப்பாக்கி வைத்த முன்னாள் அமைச்சர் கைதானது ஏன்?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வததேவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தேவிற்கு சொந்தமான மிரிஹான எம்புல்தெனிய சாலாவ வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, குறித்த வீட்டிற்குச் சென்று வாகனத்தை சோதனையிட்டனர்.

இலக்கத் தகடு இல்லாத சம்பந்தப்பட்ட கார் கடந்த 26ம் திகதி கண்டறியப்பட்டது.

குறித்த வீட்டில், முன்னாள் அமைச்சரின் மனைவியின் தாயார் வசிப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரத்வத்தேவின் பிரத்தியேக செயலாளர், கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் அந்த காரை தமது வீட்டின் வாகன தரிப்பிடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடுகள் மற்றும் சாவி இல்லாத அந்த சொகுசு காரை மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்ல பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, October 30, 2024

மாணவிகள் வன்பு ணர்வு : கராத்தே பயிற்றுவிப்பாளர் உட்பட இருவர் கைது


மாணவிகள் வன்பு ணர்வு : கராத்தே பயிற்றுவிப்பாளர் உட்பட இருவர் கைது

பதின்ம வயதுடைய இரண்டு மாணவிகளை வன்பு ணர்விற்கு உள்ளாக்கிய கராத்தே பயிற்றுவிப்பாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பகா(gampaha), தொம்பே கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தொம்பே காவல்துறையினர் தெரிவித்தனர்.

16 மற்றும் 13 வயதுடைய இரண்டு மாணவிகளே இவ்வாறு வன்பு ணர்விற்கு உள்ளாக்கப்பட்டவர்களாவர்.

பாடசாலையில் கராத்தே பயிற்சி

மாணவிகள் கல்வி கற்கும் பாடசாலையில் கராத்தே பயிற்றுவிப்பாளராக மேற்படி சந்தேக நபர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சந்தேக நபர் கராத்தே பயிற்றுவிக்கும் போது இந்த இரு மாணவிகளையும் வன்பு ணர்விற்கு உள்ளாக்கியுள்ளார்.

மேலதிக விசாரணை

இது தொடர்பில் காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை தொம்பே காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

மனோ கணேசனின் ஆதரவாளர்கள் மீது மோதிய பாரம்தூக்கி: பொலிஸ் விசாரணை தீவிரம் | A Weightlifter Hit Mano Ganesan S Supporters


மனோ கணேசனின் ஆதரவாளர்கள் மீது மோதிய பாரம்தூக்கி: பொலிஸ் விசாரணை தீவிரம்
கொழும்பில் பிரசார பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொது தேர்தல் வேட்பாளர் மனோ கணேசனின் வாகன சாரதி மற்றும் தற்போதைய தனிப்பட்ட பாதுகாவலர் இருவர் மீதும் பாரந்தூக்கி ஒன்று மோதியதில் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(30.10.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்துக்கு உள்ளான இருவரும் தற்போது கொழும்பு ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசாரணைகள்

இந்நிலையில் விபத்து தொடர்பில் சம்பவ இடத்துக்கு விரைந்த மட்டக்குளிய பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு அதிகாரிகள் உடனடியாக பாரந்தூக்கியின் சாரதியை கைது செய்துள்ளனர்.

மேலும், சாரதி பணிபுரியும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், மனோ கணேசனும் அவர் சக கொழும்பு மாவட்ட வேட்பாளர், லோஷனும் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரம் செய்து கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விபத்து தொடர்பான ஏனைய விசாரணைகளை மட்டகுளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் அரச்சுனாவை கைது செய்ய உத்தரவு! பேஸ்புக்கை மூடிவிட்டு தலைமறைவு!


வைத்தியர் அரச்சுனாவை கைது செய்ய உத்தரவு! பேஸ்புக்கை மூடிவிட்டு தலைமறைவு!

வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்குள் புகுந்து ரௌடித்தனத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா மன்னார் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வைத்தியர் அர்ச்சுனா மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மனஅழுத்தம், தேர்தல் பரப்புரையில் தீவிரமாக உள்ளார் என அவரது சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.

வைத்தியர் அர்ச்சுனா தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், அவரது புதிய காதல் ஒலிப்பதிவுகள் என குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், வைத்தியர் அர்ச்சுனாவும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதை சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். இன்று காலையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டதையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதையடுத்து அர்ச்சுனாவை கைதுசெய்து முற்படுத்த மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து அர்ச்சுனா தனது பேஸ்புக் கணக்கை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

யாழில் பயங்கரம்!! கணவனும் மனைவியும் கொங்கிறீட் கற்களால் தலையில் நசுக்கிப் படுகொலை!!


யாழில் பயங்கரம்!! கணவனும் மனைவியும் கொங்கிறீட் கற்களால் தலையில் நசுக்கிப் படுகொலை!!

வடமராட்சி, பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக காணப்படுகின்றனர்.

வேலைக்குச் செல்வதற்காக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது பதில் இல்லாமை காரணமாக குறித்த வீட்டிற்கு இன்று (30) காலை சென்று பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

50 மற்றும் 51வயதான இருண்டு பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொரூரமான நிலையில் கற்களால் தலையில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவ மனையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபடுபவரும் மாணிக்கம் சுப்பிரமணியம் 53 மற்றும் அவரது மனைவி மேரி 54 வயதுடைவர்களே கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. பருத்தித்துறை நீதவானின் பிரசன்னத்திற்கு பின்னரே சடலங்களை மீட்டு மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, October 29, 2024

பருத்தித்துறையில் கணவன், மனைவி அடித்துக்கொலை


பருத்தித்துறையில் கணவன், மனைவி அடித்துக்கொலை!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் கணவனும், மனைவியும் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

திருடர்களால் அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.

பருத்தித்துறை, கற்கோவளம், புனிதநகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மாணிக்கம் சுப்ரமணியம் (52), சுப்ரமணியம் மேரி ரீட்டா (51) ஆகியோரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி நீதிமன்றம் மீது அதிரடித் தாக்குதல் நடத்த முயற்சி? பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!!


சாவகச்சேரி நீதிமன்றம் மீது அதிரடித் தாக்குதல் நடத்த முயற்சி? பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!!

 யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

அதேவேளை கடந்த வாரம் மட்டக்களப்பு நீதிமன்றில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட போவதாக பதிவு தபாலில் பொலிஸாருக்கு தகவல் வந்ததை அடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கள்ளக்காதலியை பஸ்சிலிருந்து கீழே தள்ளி விட்ட 24 வயதுக் காதலன் கைது!!


கள்ளக்காதலியை பஸ்சிலிருந்து கீழே தள்ளி விட்ட 24 வயதுக் காதலன் கைது!!

தன்னுடைய கள்ளக்காதலியை பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படும் காதல​னை கைது செய்துள்ளதாக தம்புள்ளை​ பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட நபர் வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி நான்கு வயதுடைய திருமணமானவர் என பொலிஸார் தெரிவித்தனர். பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட காதலி என கூறப்படும் பலுகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த பெண் காயமடைந்த நிலையில் தம்புள்ளை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இந்த காதலர்கள் இருவரும் பொலன்னறுவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பொலன்னறுவையில் இருந்து பேருந்தில் ஏறியுள்ளனர்.பேருந்தில் ஏறியதில் இருந்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்தே காதலியை காதலன் தள்ளிவிட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Monday, October 28, 2024

யாழில் நிறைவெறியில் ஆட்டோவில் சென்று காருடன் மோதிய பொலிஸ் வீதியில் உருண்டு புரண்டு அட்டகாசம்!


யாழில் நிறைவெறியில் ஆட்டோவில் சென்று காருடன் மோதிய பொலிஸ் வீதியில் உருண்டு புரண்டு அட்டகாசம்!

யாழ் இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு முன் இன்று மாலை நிறை வெறியில் wpABV 1448 என்ற இலக்கத்தை கொண்ட பொலிஸ்  ஓட்டோவில் சென்ற 2 பொலிசார் காரை பின்பக்கமாக மோதி விபத்துக்கு உள்ளாக்கியுள்ளனர். அத்துடன் ஏராளமானவர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது நிலத்தில் நிறை வெறியில் உருண்டு பிரண்டு கத்திக் குளறியபடி இருந்துள்ளார்கள். 

இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொலிசாரால் விபத்துக்கு உள்ளான கார் சான் ரூறிஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது எனத் தெரியவருகின்றது. குறித்த காரை வாடகைக்கு ஒருவர் எடுத்துச் சென்ற போதே பொலிசார் ஆட்டோவில் நிறை வெறியில் சென்று காரை இடித்துத் தள்ளியுள்ளார்கள். இந் நிலையில் அங்கு மக்கள் கூடத் தொடங்கவே அவர்களை இரு பொலிசாரும் அச்சுறுத்தி தள்ளாடித் தள்ளாடி நிலத்தில் உருண்டு பிரண்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

இந் நிலையில் குறித்த இரு பொலிசாரும் கடமையாற்றும் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்த சிவில் உடைதரித்த பொலிசார் பொதுமக்களை அங்கிருந்து அகற்ற முற்பட்டதுடன் கார்காரருடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் விபத்தை ஏற்படுத்தி வெறியில் கிடந்த பொலிசாரை உடனடியாக அங்கிருந்து அகற்றியும் உள்ளார்கள்.

Sunday, October 27, 2024

மோட்டார் சைக்கிளிலிருந்து தாய் விழுந்தது தெரியாமல் பறந்த மகன்!! தாய் பலி!! மகன் கைது!!


மோட்டார் சைக்கிளிலிருந்து தாய் விழுந்தது தெரியாமல் பறந்த மகன்!! தாய் பலி!! மகன் கைது!!

புத்தளம் – தேத்தாப்பலைப் பகுதியில் பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறுதலாக வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

தேத்தப்பலைப் பகுதியிலிருந்து கரம்பை விகாரைக்கு மோட்டார் சைக்கிளில் தாயும் மகனும் சென்று பூஜையை முடித்து விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபொழுது பின்னால் இருந்த தாய் தவறுதலாக வீழ்ந்துள்ளார்.

குறித்தச் சம்பவம் நேற்று இரவு புத்தளம் கரமபைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பின்னர் அவரது தாய் வீழ்ந்த இடத்திலிருந்து சுமார் 70 மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற பின்னரே தாய் இல்லை என்பதை உணர்ந்து மோட்டார் சைக்கிளைத் திருப்பி தாயைத் தேடி சென்றுள்ளார்.

இதன்பின்னர் தாய் வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அங்கிருந்தவர்களினால் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது வைத்தியசாலையில் வைத்து சிகிச்சைப் பலனின்றி குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் தேத்தாப்பலை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் மகன் போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

ஆடு அறுக்க முன் பு…கை அறுக்க முற்பட்ட அர்ச்சுனா!! யாழ் அரச அதிபரிடம் கேட்டது என்ன?


ஆடு அறுக்க முன் பு…கை அறுக்க முற்பட்ட அர்ச்சுனா!! யாழ் அரச அதிபரிடம் கேட்டது என்ன?

போனஸ் ஆசனம் என்பதை நீங்கள் தெரிவு செய்வதா? அல்லது நாங்கள் தெரிவு செய்வதா என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரி அர்ச்சுனா யாழ் அரச அதிபரிடம் கேட்டுள்ளார். இன்று தேர்தல் வேட்பாளர்களுடனான அரசஅதிபரின் கலந்துரையாடலின் போதே அர்ச்சுனா இவ்வாறு அரச அதிபரிடம் கேட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் மனநலனம் குன்றியவர்களும் தேர்தலில் போட்டியிடலாமா எனவும் அர்ச்சுனா அரச அதிபரிடம் கேட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்காவில் இறங்கியவரும் அவரை அழைத்துச் செல்லவந்தவரும் கைதானது ஏன்?


வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்காவில் இறங்கியவரும் அவரை அழைத்துச் செல்லவந்தவரும் கைதானது ஏன்?

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனைய வளாகத்தில் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளை கொண்டுவந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரை அழைத்துச் செல்ல விமான நிலையத்துக்கு வந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மூவரும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான நபர் 51 வயதுடைய கொத்தடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரிடமிருந்து 05 கிலோ 26 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய சந்தேக நபரை அழைத்துச் செல்ல காத்திருந்த கார் சாரதி மற்றும் காரில் சென்ற மற்றுமொரு பெண் ஆகிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் வேபோட மற்றும் வாதுவ பிரதேசங்களை சேர்ந்த 36, 33 வயதுடையவர்கள் ஆவர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

னார்கள் என்றும் அனுபவப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Saturday, October 26, 2024

யாழில் பிரபல வர்த்தகர் தற்கொலை முயற்சி!!சிறுமியுடன் உறவு! தொடர்ச்சியாக காசு பறித்தாரா சிறுமியின் அம்மா?


யாழில் பிரபல வர்த்தகர் தற்கொலை முயற்சி!!சிறுமியுடன் உறவு! தொடர்ச்சியாக காசு பறித்தாரா சிறுமியின் அம்மா?

யாழில் பிரபல வர்த்தகர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள அவருக்கு சொந்தமான களஞ்சியசாலையில் இரவு நேரம் மரம் ஒன்றில் ஏறி துாக்கில் தொங்க முற்பட்ட நிலையில் அயல்பகுதியில் உள்ளவர்களால் அவதானிக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். 

களஞ்சியம் உள்ள காணியின் மரத்தில் யாரோ ஏறுவதை அவதானித்த அயலில் உள்ள இளைஞா்கள் திருடன் என நினைத்து அவதானித்த போது அந் நபர் கழுத்தில் கயிற்றைக் கட்டி துாக்கில் தொங்க ஆயத்தமானதை பார்த்து உள்ளே சென்று அவரை மீட்ட போதே அவர் களஞ்சியத்துக்கு சொந்தமான பிரபல வர்த்தகர் என தெரியவந்தது. வழக்கமாக களஞ்சியசாலைக்கு வாகனத்தில் வரும் வர்த்தகர் அன்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்து அதையும் தொலைவில் நிறுத்தி விட்டே அங்கு வந்துள்ளார்.

குறித்த களஞ்சியசாலையை வர்த்தகர் தனது அந்தரங்க செயற்பாடுகளுக்காகப் பாவித்து வந்ததாகவும் தெரியவருகின்றது. அண்மையில் களஞ்சியசாலைக்கு 12 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து வர்த்தகருடன் கடும் சண்மையிட்டுள்ளார். தனது மகளை துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக தாய் கத்திக் குளறி ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் தெரியவருகி்ன்றது. அச் சிறுமியும் தாயும் வர்த்தகர் குறித்த களஞ்சியசாலையில் தனிமையில் இருக்கும் போது அடிக்கடி வந்து செல்பவர்கள் எனவும் அயலவர்கள் மூலம் தெரியவருகின்றது. 

குறித்த பெண்ணும் சிறுமியுடன் நாவற்குழி களஞ்சியசாலைக்கு அருகில் வசித்து வருபவர்கள் எனவும் தெரியவருகின்றது. அப் பெண்ணுடன் அந்தரங்க நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர் பெண்ணின் சிறுவயது மகளையும் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி இருக்கலாம் எனவும் இதன் காரணமாக குறித்த பெண் வர்த்தகரை அச்சுறுத்தி பெருமளவு பணத்தை தொடர்ச்சியாக பறித்துவந்திருக்கலாம் எனவும் அயலவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள். இதன் தொடர்ச்சியகவே வர்த்தகர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.

Friday, October 25, 2024

யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பிக்கான வாக்கு வீழ்ச்சி ஆரம்பம்!!


யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பிக்கான வாக்கு வீழ்ச்சி ஆரம்பம்!!

 யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் மற்றும் அங்கஜன் குழுவினரது அட்டகாச நாட்டாமை நடவடிக்கை மற்றும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஏமாற்று பித்தலாட்டங்களால் விரக்தியுற்றிருந்த பலர் ஜே.வி.பியின் ஊழலற்ற ஆட்சிக்கு ஆதரவாக அவர்களுக்கு வாக்கு போடுவதற்கு எண்ணியிருந்தனர். பலர் தமது சொந்தசமூக வலைத்தளங்களில் பகிரங்கமாகவே ஜே.வி.பிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர். 

இவ்வாறான நேரத்தில்  யாழ்ப்பாண நாட்டாமைகளில் ஒருவரான டக்ளஸ் ஜனாதிபதியை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துள்ளமை யாழ்ப்பாண மக்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. 
இதனால் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி கட்சிக்கு பெரும் வாக்கு வீழ்ச்சி ஏற்படும் என்பதை அவதானிக்க முடிகின்றது. ஏற்கனவே பிரபலம் இல்லாத பலரை யாழ்ப்பாண நாடாளுமன்ற வேட்பாளர்களாக களம் இறக்கியிருக்கும் ஜே.வி.பி கட்சி தற்போது டக்ளசைசும் அரவணைத்துள்ளமை யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பிக்கு கிடைக்கும் வாக்குகளில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தவுள்ளதாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

கனடா கனவில் இருப்பவர்களுக்கு ஆப்பு வைத்த கனேடிய அரசு!! இனிமேல் கனடா செல்வது சாத்தியமா?


கனடா கனவில் இருப்பவர்களுக்கு ஆப்பு வைத்த கனேடிய அரசு!! இனிமேல் கனடா செல்வது சாத்தியமா?

பல ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா கடுமையாகக் குறைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இது அதிகாரத்தில் இருக்க முயற்சிக்கும் அரசாங்கத்தின் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும்.

கனடா 2025 இல் 395,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களையும், 2026 இல் 380,000 மற்றும் 2027 இல் 365,000 ஆகவும், 2024 இல் 485,000 ஆகக் குறையும் என்று அரசாங்க ஆதாரம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 2025 இல் சுமார் 30,000 குறைந்து 300,000 ஆக இருக்கும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

புதிய இலக்குகள் முதலில் தி நேஷனல் போஸ்ட் மூலம் தெரிவிக்கப்பட்டது.

புதியவர்களை வரவேற்பதில் கனடா நீண்ட காலமாக பெருமை கொள்கிறது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், குடியேற்றவாசிகள் பற்றிய தேசிய விவாதம், உயரும் வீட்டு விலைகள் காரணமாக ஒரு பகுதியாக மாறியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வட்டி விகிதங்கள் உயரத் தொடங்கியதில் இருந்து பல கனேடியர்கள் வீட்டுச் சந்தையில் இருந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், குடியேற்றவாசிகளின் பெரும் வருகை கனடாவின் மக்கள்தொகையை சாதனை நிலைக்குத் தள்ளியுள்ளது, மேலும் வீட்டுத் தேவை மற்றும் விலைகளை மேலும் உயர்த்தியுள்ளது.

இந்த விவகாரம் கனடிய அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது, கூட்டாட்சித் தேர்தல் அக்டோபர் 2025 க்குப் பிறகு நடைபெற உள்ளது.

இரண்டு நாட்களில் மூன்று இளைஞர்கள் யாழ்வடமராட்சியில் உயிரிழப்பு ;


இரண்டு நாட்களில் மூன்று இளைஞர்கள் யாழ்வடமராட்சியில் உயிரிழப்பு !

வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் தீடிரென உயிரிழந்த சம்பவம்
துயரத்தைஏற்படுத்தியுள்ளது .

ஜனநாயக தேசிய கூட்டணியில் இம்முறை போட்டியிடும் இளம் வேட்பாளரும் முன்னைநாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான செந்திவேல் தமிழினியன் வயது 33 என்பவரே தீடிரென உயிரிழந்துள்ளார் .

நேற்றுமுன் தினம் சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் .

2> இதேவேளை யாழ் வடமராட்சி பகுதியில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் அதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அடிக்கடி சுகயீனமுற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .

இந் நிலையில் நேற்றைய தினம் சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1:00 மணியளவில் உயிரிழந்துள்ளார் .

நெல்லியடி செல்லமுத்தூஸ் புடவைக்கடையில் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த கரவெட்டி கப்பூது பகுதியைச் சேர்ந்த மகேந்திரம் துசிகரன் வயது 34 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

3> இதேவேளை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார் .

பருத்தித்துறை கூவில் பகுதியைச் சேர்ந்த சிவதாஸ் வயது 26 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

மேற்படி இளைஞர்களின் உயிரிழப்பு வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறிதரன் எம்பியாக தெரிவு செய்யப்பட்டாலும் பதவியை இழப்பார்!! சுமந்திரனால் இறுக்கப்படவுள்ள ஆப்பு!! அதிர்ச்சித் தகவல்கள்


சிறிதரன் எம்பியாக தெரிவு செய்யப்பட்டாலும் பதவியை இழப்பார்!! சுமந்திரனால் இறுக்கப்படவுள்ள ஆப்பு!! அதிர்ச்சித் தகவல்கள்

முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் அரசாங்கத்திற்கு ஆதரவாக கட்சி முடிவுக்கு மாறாக செயற்பட்டமை தொடர்பில் அவரது கட்சி உறுப்புரிமையை நீக்க ஶ்ரீ

லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தீர்மானம் எடுத்திருந்தது.

இதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த வழக்கில், குறித்த முடிவுசெல்லுபடியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கமைய, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நசீர் அஹமட்

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர் தனது எம்பி

பதவியை இழந்தார். அவருக்கு பதிலாக அலி ஸாஹிர் மெளலானா, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.இது கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம்

நடந்தது.

அவ்வாறே ஜக்கிய மக்கள் சக்தி அமைச்சர்களாக இருந்த ஹரின் பெர்நாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார இருவரும் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்டமையால் கட்சியிலிருந்து நீக்கியது. அவர்களும் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.உயர் நீதிமன்ற தீர்ப்பு ஜக்கிய

மக்கள் சக்தியின் முடிவை உறுதிப்படுத்தியதோடு, இலங்கை தேர்தல் சட்டத்தின்படி அவர்கள் தாமாகவே பாராளுமன்றத்தில் இருந்து பதவி நீக்கம்

செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தியது. இச் சம்பவம் ஓகஸ்ட் 2024 இல் நடந்தது.

ஒருவர் அவரது கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்டால் அவரை அக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் கட்சியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் நீக்கம் செய்ய முடியும். அவ்வாறு நீக்கப்படுகின்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் அவரது

பாராளுமன்ற பதவியும் இழக்கப்படும். அதற்கு மேற்குறிப்பிட்ட உதாரணங்கள் சாட்சி. இப்போது விடயத்திற்கு வருவோம்

தமிழரசு கட்சி தற்போது முழுக்க முழுக்க திருவாளர் சுமந்திரனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அவரின்றி தமிழரசுக் கட்சிக்குள் அணுவும்

அசையாது என்ற யாதார்த்தமே காணப்படுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சி சஜித் பிறேமதாசவை ஆதரிக்கும் தீர்மானத்தை

மேற்கொண்டிருந்தது. ஆனால் திரு. சிறிதரன் அவர்கள் அதற்கு மாறாக பொதுவேட்பாளரை ஆதரித்திருந்தார். எனவே கட்சியின் தீர்மானத்தை மீறி

செயற்பட்டவர்கள் மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என திரு. சுமந்திரன் அவர்களும் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் திரு. சத்தியலிங்கம் அவர்களும் அறிவித்திருந்தனர். சிலருக்கு விளக்கம் கேட்டு கடிதங்களும் அனுப்பபட்டுள்ளன.

பாராளுமன்ற தேர்தலில் திரு. சிறிதரன் அவர்களுக்கு மக்கள் வாக்களித்து அவரை எம்பியாக தெரிவு செய்யத பின்னர் தமிழரசு கட்சி அவருக்கு எதிராக

ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கினால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இழக்கப்படும். இதற்கான வாய்ப்புக்களே மிக அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த தேர்தலில் திரு சிறிதரன் அவர்கள்

வென்றாலும் எம்பியாகவும் இருக்க முடியாது. தமிழரசு கட்சிக்குள்ளும் இருக்க முடியாது.

நன்றி

முருகையா தமிழ்ச்செல்வன்

Thursday, October 24, 2024

வேலைக்கப் போகாத டொக்டரும் பள்ளிக்கூடமே போகாத மாணவியும்!! என்ன கதைச்சிருப்பினம்?


வேலைக்கப் போகாத டொக்டரும் பள்ளிக்கூடமே போகாத மாணவியும்!! என்ன கதைச்சிருப்பினம்?

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

சினிமாப் பாட்டுக்கள் பாடி திரியும் இந்த மாணவி பள்ளிக்கூடம் ஒழுங்காகப் போகாமல் பாடித்திரிகிறார்….. வைத்தியத்துறையில் மக்களுக்கு சேவை செய்கின்றேன் என பலரையும் ஆச்சரியப்படுத்தி ஊழல்களை வெளிப்படுத்துகின்றேன் என கூறிய வைத்தியர் தற்போது விசர்க் குணத்தில் திரிகின்றார்….

இவ்வளவுக்கும் யார் காரணம்? நம்ம புலம்பெயர் விசர்க் கூட்டம்தான்….

இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் திட்டம்!! இரு யாழ்பாணிகள் கைது!! சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?


இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் திட்டம்!! இரு யாழ்பாணிகள் கைது!! சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?

சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த சந்தேகநபரை , சுன்னாகத்தில் அவரின் வீட்டில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். மற்றையவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர், குற்றச்செயல் ஒன்றிற்காக இலங்கை சிறையில் தண்டனை அனுபவித்த கால பகுதியில் சிறையில் பாகிஸ்தான் மற்றும் ஈரான் கைதிகளுடன் தொடர்புகளை பெற்று ,  நாசகார செயலில் ஈடுபட முனைந்தார் என தெரிவிக்கப்படுகிறது

கைது செய்யப்பட்ட இருவரிடமும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பே பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதை தவிர்க்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்றைய தினம் புதன்கிழமை அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 23, 2024

இலங்கை முழுவதும் தீவிர பாதுகாப்பு | Sri Lankan Police Tighten Security


இலங்கை முழுவதும் தீவிர பாதுகாப்பு
இலங்கை முழுவதும் பல பகுதிகளுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் இராணுவ நிலைமையை கருத்திற் கொண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பின் பேரில், பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புகளும் இணைந்து இந்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கை

எந்தவொரு சுற்றுலாப் பயணியும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை 1997 இலங்கை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்க முடியும் என இலங்கை பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும், மற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு அடிக்கடி வரும் நகரங்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வெலிகம, பண்டாரவளை, எல்ல உள்ளிட்ட பல பகுதிகளுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இன்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு! | Israelis In Sri Lanka Ordered To Leave


இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு!
Sri Lankan Peoples United States of America Israel

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு அந்நாட்டு தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

பயங்கரவாதத் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், சில சுற்றுலாப் பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் உள்ள அருகம்பே மற்றும் கரையோரப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என்றும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

இதேவேளை, இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு சபை குறிப்பாக இதில் உள்ள ஆபத்தின் தன்மையை குறிப்பிடவில்லை.

எனினும், இலங்கையின் பிற பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பெரிய கூட்டங்களைத் தவிர்க்குமாறும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அறுகம்பை தாக்குதல் திட்டம் : இந்திய உளவுத்துறை முன்கூட்டியே வழங்கிய தகவல் | Informed Indian Intelligence Arugambe Attack Plan


அறுகம்பை தாக்குதல் திட்டம் : இந்திய உளவுத்துறை முன்கூட்டியே வழங்கிய தகவல்
அறுகம்பை தாக்குதல் திட்டம் குறித்து இந்திய (india)புலனாய்வு அமைப்புகளால் இலங்கை(sri lanka) பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக இன்று (23) தெரியவந்துள்ளது.

அம்பாறை(ampara) மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அறுகம்பையில் கடலில் நீச்சல் செய்பவர்கள்(sea surfers) அடிக்கடி வரும் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அந்த இடம் இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் பகுதியும் கூட.

இந்திய புலனாய்வு அமைப்பு 

இவ்வாறானதொரு பின்னணியில் அறுகம்பை பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்துள்ளன.இது தொடர்பான தாக்குதல் ஒக்டோபர் 19 முதல் 23 வரை நடத்தப்படலாம் என இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அறுகம்பை தாக்குதல் திட்டம் : இந்திய உளவுத்துறை முன்கூட்டியே வழங்கிய தகவல் | Informed Indian Intelligence Arugambe Attack Plan

இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கைச்(Iraq.) சேர்ந்தவர் என்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவிக்கப்பட்டது. தாக்குதலுக்காக அவர்களுக்கு சுமார் 50 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாகவும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பான தகவல்

இதன்படி குறித்த இருவரின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Informed Indian Intelligence Arugambe Attack Plan

அண்மைய நாட்களில் ஹிஸ்புல்லா தலைவர்களை லெபனானில்(lebanon) இஸ்ரேல்(israel) கொன்றமைக்கு பழிவாங்கும் முகமாக இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலை அடுத்து பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

இத்தகவலைப் பெற்றுக்கொண்ட பாதுகாப்பு தரப்பினர் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அறுகம்பை பிரதேசத்தின் பாதுகாப்பின் பின்னணியில் இஸ்ரேலியர்கள் வருகை தரும் வெலிகம உட்பட தென் மாகாணத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. எல்ல பிரதேசத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவில் நண்பியின் வீட்டுக்குள் இருந்த இளைஞனுடன் உறவு கொண்ட யுவதி தற்கொலைக்கு முயன்றது ஏன்?


முல்லைத்தீவில் நண்பியின் வீட்டுக்குள் இருந்த இளைஞனுடன் உறவு கொண்ட யுவதி தற்கொலைக்கு முயன்றது ஏன்?

முல்லைத்தீவு, மாமூலைப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த யுவதி, அருகில் உள்ள வீடு ஒன்றிற்கு தனது நண்பியினை தேடி சென்ற போது நண்பியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் தனிமையில் இளைஞன் ஒருவர் இருந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த இளைஞன் வீட்டிற்குள் வரசொல்லி யுவதியினை அழைத்துவிட்டு யுவதியினை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இளைஞனிடமிருந்து தப்பி சென்ற யுவதி தனக்கு நடந்தவற்றை வெளியில் தெரியபடுத்தும் முன்னர் தவறான முடிவெடுக்க முயற்சித்த நிலையில் வீட்டாரால் காப்பாற்றப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் கொடுத்த வாய்முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இளைஞனை கைதுசெய்யும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tuesday, October 22, 2024

வைத்தியர் அர்ச்சுனாவில் மோகம்!! பிரான்சில் உறுப்பில் பச்சை குத்திய 36 வயது குடும்பப் பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட கணவன் கைது!!


வைத்தியர் அர்ச்சுனாவில் மோகம்!! பிரான்சில் கால்கலுக்கு நடுவில் பச்சை குத்திய 36 வயது குடும்பப் பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட கணவன் கைது!!

பிரான்ஸ் றியேம்ஸ் பகுதியில் 41 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான யாழ்ப்பாணத் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. 

குறித்த குடும்பப் பெண் யாழ்ப்பாண வைத்தியர் அர்ச்சுனாவின் உருவத்தை தனது கால்கலுக்கு நடுவில் பகுதியில் பச்சை குத்தியதை அறிந்த கணவன் மனைவியின் பச்சை குத்திய கைப் பகுதியை பொல்லால் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியதுடன் மனைவியின் முகம் மற்றும் வயிற்றுப் பகுதிகளிலும் கைகளால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. அரசாங்கத்தின் பொறுப்பில் அரச விடுதியில் வாழும் குறித்த குடும்பத்தைச் சேர்ந்த கணவனே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அர்ச்சுனாவுக்கு ஆதரவான ரிக்ரொக் வலைத்தளத்தில் பெரும் கருத்து மோதல்கள் இடம்பெற்றுவருகின்றது.

வெளிநாடுகளில் வாழும் பல தமிழ்க் குடும்பப் பெண்கள் ரிக்ரொக் மற்றும் பேஸ்புக் சமூகவலைத்தளங்களில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு கண்மூடித்தனமான ஆதரவை வழங்கி வருவதுடன் பெருமளவு பணத்தையும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது வழங்கி வருவதாகவும் தெரியவருகின்றது. 

இச் சம்பவங்களால் புலம்பெயர் தேசங்களில் வாழும் கணவர்கள் பலர் பெரும் அவஸ்தையை அனுபவித்து வருகின்றார்கள் எனவும் அறிய முடிகின்றது. மேலும் பல சம்பவங்கள் வைத்தியர் அர்ச்சுனாவின் திருவிளையாடல்களால் நடந்தேறி வருகின்றன. அவை தொடர்பாக நாம் இங்கு விபரமாக வெளியிடவுள்ளோம்.

இரத்தினபுரியில் பயங்கரம்!! ஆயுதமுனையில் கடத்தப்பட்ட மகனை காப்பாற்ற போராடிய தந்தை கொலை!!


இரத்தினபுரியில் பயங்கரம்!! ஆயுதமுனையில் கடத்தப்பட்ட மகனை காப்பாற்ற போராடிய தந்தை கொலை!!

இரத்தினபுரி, எஹலியகொட பிரதேசத்தில் இனந்தெரியாத ஆயுதக் குழுவினால் ஜீப்பில் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தை அதே ஜீப்பினால் மோதி கொலை செய்யப்பட்டுள்ளார்.ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் கடத்தப்பட்ட மகனை எஹெலியகொட பின்னவல பகுதிக்கு அழைத்துச் சென்று வீதியில் மண்டியிட்டு கைவிலங்கிட்டு அசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தந்தைக்கும் குடும்பஸ்தர்களுக்கும் இடையில் அயலவர் குழுவுடன் சில காலமாக தகராறு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் அதிகாலை எஹெலியாகொடவில் உள்ள வீட்டிற்கு 6 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய குழுவொன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த மகனை வலுக்கட்டாயமாக கடத்த முயன்றுள்ளார். இதனை தடுத்து நிறுத்தும் நோக்கி 65 வயதுடைய தந்தை ஜீப்பில் தொங்கியபடி சென்றுள்ளார்.​​கடத்தல்காரர்களின் ஜீப்பில் இருந்து கீழே தள்ளப்பட்ட தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை, ஆயுததாரிகள் தாக்குதலுக்கு இலக்கான மகன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்களை பழிவாங்கும் நோக்கில், பணத்தைக் கொடுத்து இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.நேற்று வரை தாக்குதல் நடத்திய கும்பலை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை.

திருமணத்திற்கு புறம்பான உறவின் அடிப்படையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு குடும்பங்களுக்கு இடையில் சில காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதோடு, ஒரு குடும்பத்தை சேர்ந்த குழுவினர் இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்.சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொழும்பிலுள்ள விடுதி அறையில் காதலியை தங்க வைத்து காதலன் செய்த திருவிளையாடல்கள்!!


கொழும்பிலுள்ள விடுதி அறையில் காதலியை தங்க வைத்து காதலன் செய்த திருவிளையாடல்கள்!!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் தனது காதலியை பயன்படுத்தி பாரியளவில் போதைப்பொருள் விநியோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, நாரஹேன்பிட்டி ஆகிய பிரதான இரவு விடுதிகளில் நடனமாடும் தனது காதலியை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வந்துள்ளார்.

கஸ்கிஸ்ஸ சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினரால் பாரிஸ் என அழைக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்இதன்போது 70,00000 ரூபாய் பெறுமதியான 35900 மில்லிகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள், 900 போதைப்பொருள் LSD முத்திரைகள் மற்றும் 18 எக்ட்ரீஸ் மாத்திரைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கொக்கிளாய் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், கல்கிஸ்ஸ பகுதியில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வீட்டில் பலத்த பாதுகாப்பில் தங்கியிருநு்துள்ளார். கொழும்பில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நடனமாடும் அவரது 23 வயது காதலி ஊடாக இரவு விடுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தனது காதலியுடன் வீட்டில் தங்கியிருந்த போது, ​​உப பொலிஸ் பரிசோதகர் சாமிக்க ஜயவீர உள்ளிட்ட குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் மாலைதீவு மற்றும் நைஜீரிய நபர்களிடம் இருந்து போதைப்பொருட்களை பெற்று, வீட்டில் இருந்து பொதி செய்து தனது காதலி மூலம் இரவு விடுதிகளுக்கு விநியோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Monday, October 21, 2024

17 வயதான இரு மாணவிகள் ஒரே நேரத்தில் மரணமாக முடிவு செய்தது ஏன்? ஒரு மாணவி ஏன் தப்பினாள்!! பதுளை மாணவிக்கு நடந்தது என்ன?


17 வயதான இரு மாணவிகள் ஒரே நேரத்தில் மரணமாக முடிவு செய்தது ஏன்? ஒரு மாணவி ஏன் தப்பினாள்!! பதுளை மாணவிக்கு நடந்தது என்ன?

பதுளை – மஹியங்கனை வீதியில் லொக்கல்ல ஓயா நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்த 17 வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் நேற்று (21) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பதுளை கந்தேகெதர, வட்டகோகெதர, இலுக முகவரியில் வசிக்கும் ஜி.எச். திலினி உபேக்ஷா சண்டமாலி 17 வயதுடைய பாடசாலை மாணவி.

பதுளை கந்தேகெதர பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று முன்தினம் (20) காலை பதுளை நகரில் பயிற்சி வகுப்பிற்கு செல்வதற்காக வீடுகளை விட்டு வெளியேறிய தமது மகள்கள் வீடு திரும்பவில்லையென அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்ததன் பின்னர், ரிதிமாலியத்த பொலிஸில் மாணவி ஒருவர் இருப்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

20ம் திகதி இரவு 7.30 மணியளவில் பதுளை பகுதியிலிருந்து மொனராகலை பகுதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், 17 வயதுடைய பாடசாலை மாணவியை ரிதிமாலியத்த பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடம் கையளித்துள்ளார். பின்னர், சிறுமி ரிதிமாலியத்த பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்டதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது தோழியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்ததாகவும், நேற்று முன்தினம் (20) இருவரும் தற்கொலை செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து, காலை 8 மணியளவில் வீட்டில் இருந்து பதுளை நகருக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. அதன்பின் மஹியங்கனை பஸ்ஸில் ஏறி, அவர்களின் கைபேசியில் இருந்த சிம்கார்டுகளை கழற்றி எறிந்துவிட்டு, மஹியங்கனை நகருக்கு வந்து, சாப்பாட்டுக்கடையில் சோற்று பார்சல் வாங்கி, பாதியை சாப்பிட்டு, மீதியை மீண்டும் பார்சல் செய்துவிட்டு, மீண்டும் பஸ்சில் ஏறினார். பதுளை, லொக்கல்ல ஓயா ஏரி பந்தலுக்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்கி அதனை அடுத்துள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது கொண்டு வந்த சோற்று பார்சலை சாப்பிட்டனர். பின்னர், உயிரிழந்த மாணவி தனது புத்தகப் பையில் இருந்த புத்தகத்தில், ‘நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களைத் தேடாதீர்கள்’ எனத் வாசகம் எழுதி வைத்துவிட்டு, மாலை 6.30 மணியளவில் இரண்டு யுவதிகளும் தங்களுக்குள் பேசிவிட்டு தற்கொலை செய்து கொள்வதற்காக லொக்கல்ல ஓயா நீர்த்தேக்கத்திற்குச் சென்றுள்ளனர்.

போலீஸ் காவலில் இருக்கும் மாணவி, சாக முடியாது, திரும்பிப் போகலாம் என்றுள்ளார். ஆனால் மற்றைய மாணவி, இப்போது வீடு திரும்பினால் பெற்றோர் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வாள் என்று கூறியுள்ளார். உங்களால் முடியாவிட்டால் நான் குதிப்பேன் என்றுவிட்டு அந்த நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார். பின்னர் மற்றைய மாணவி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி, ஏற்றிச் செல்லுமாறு கூறியதுடன், சாரதி சிறுமியை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று (21) பிற்பகல் மஹியங்கனை நீதவான் ஆர்.எஸ்.ஜினதாச சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

இந்த பாடசாலை மாணவி தனது தோழியுடன் தற்கொலை செய்து கொள்ள வந்ததற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், மஹியங்கனை, ரிதிமாலியெத்த மற்றும் பதுளை பொலிஸ் நிலையங்கள் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெற்றோரே அவதானம்!! நண்பியுடன் தனியார் வகுப்புக்குச் சென்ற 17 வயது மாணவி சடலமாக மீட்பு ; நடந்தது என்ன?


பெற்றோரே அவதானம்!! நண்பியுடன் தனியார் வகுப்புக்குச் சென்ற 17 வயது மாணவி சடலமாக மீட்பு ; நடந்தது என்ன?

பதுளையில் தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற 17 வயதுடைய இரு மாணவிகளில் ஒருவரின் சடலம், மஹியங்கனை லொக்கலோ ஓயாவில் இருந்து, திங்கட்கிழமை (21) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த மாணவியுடன் சென்ற மற்றைய மாணவி தற்போது ரிதிமாலியத்த பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெற்றோர் பதுளை பொலிஸில் முறைப்பாடு

இந்த இரண்டு மாணவிகளும் ஒரே பாடசாலையில் படிக்கும் நண்பிகள் என்பது விசாரணகளில் இருந்து தெரியவந்துள்ளது.நெடுஞ்சாலையில், நேற்று (20) இரவு பயணித்த மோட்டார் சைக்கிளை மாணவி ஒருவர் நிறுத்தியுள்ளார். அந்த மாணவியை ஏற்றிக்கொண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்.பொலிஸ் வீதித்தடை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை நகரில் உள்ள தனியார் வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு, நேற்று (20) காலையிலேயே வீட்டில் இருந்து சென்ற இவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர் பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.மாணவியின் மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையிம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job