47 வயது கனடா செந்துாரன் யாழில் நண்பனின் 22 வயது மகளான மாணவியைக் கர்ப்பமாக்கி தலைமறைவு!!ணவியான மகளை கர்ப்பமாக்கினான்!!
யாழில் 22 வயது பல்கலைக்கழக மாணவி ஒருவர் 47 வயதான கனடா தமிழ் குடும்பஸ்தரான செந்துாரனுடன் தலைமறைவாகியுள்ளார். குறித்த கனடா குடும்பஸ்தர் செந்துாரன் மாணவியின் தந்தையின் நெருங்கிய நண்பர் என தெரியவருகின்றது. கனடா செல்வதற்கு முன்னரே வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இருவரும் பாடசாலை நண்பர்களாகவும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளார்கள்.
அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து சென்ற செந்துாரன் தனது பாடசாலைத் தோழனான மாணவியின் தந்தையுடனேயே பல இடங்களுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந் நிலையிலேயே செந்துாரன் தனது நண்பனின் மகளுடன் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் மாணவியின் தந்தை மற்றும் தாய் மாணவியைக் காணாது தேடி மாணவியின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதே மாணவி தான் செந்துாரனுடன் குடும்பம் நடாத்துவதாகவும் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னைத் தேட வேண்டாம் எனவும் தனது தாயாருக்கு கூறியதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து செந்துாரன் தங்கியிருந்த அக்காவின் வீட்டுக்குச் சென்ற தந்தை அங்கு கலவரத்தில் ஈடுபட்டதுடன் செந்துாரனின் பொருட்களை அடித்து உடைத்து அட்டகாசம் செய்துமுள்ளார்.
0 comments:
Post a Comment