நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 5, 2018

மஹிந்த படையை கண்டு ரணில் அரசு பதற்றம் அடைந்துள்ளதா?




அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்பதற்காகவே மக்கள் ஜனநாயக வழியில் போராட தலைநகரை நோக்கி வந்தனர். ஆனால் பொலிஸார் அவர்களை வழிமறித்து கொழும்பு செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

இதன் மூலம் அந்த மக்களின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

   
       
   
 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எதிர்ப்பு பேரணி காரணமாக அரசாங்கம் மிகவும் பதற்றமடைந்துள்ளது. நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உள்ள பொலிஸாரை கொழும்புக்கு அழைத்து எமது ஜனநாயக போராட்டத்தை முடக்க சூழ்ச்சி செய்துள்ளனர்.

பல சவால்களுக்கு மத்தியிலே பாரிய மக்கள் வெள்ளம் இன்று கொழும்புக்கு வந்துள்ளது.

அரசாங்கத்தின் ஏமாற்று வித்தைகளுக்கு மக்கள் மேலும் ஏமாற மாட்டார்கள். எமது போராட்டத்துக்கு பொலிஸார் இடையூறு விளைவிப்பதன் ஊடாக தொடர்ந்து இந்த அரசாங்கத்தின் அடிமைகளாகவே பொலிஸார் செயற்பட போகின்றனர்.

இதனை பொலிஸார் உணர வேண்டும்.

இதேவேளை மக்களின் கோரிக்கைகளை அறிந்து அரசாங்கம் உடனடியாக பொதுத்தேர்தலை நடத்த வேண்டும். இதன் மூலம் அரசாங்கத்தை வீட்டுக்கு உடனடியாக அனுப்ப முடியும் என்றார் டலஸ் அழகப்பெரும எம்.பி.

மக்கள் எழுச்சி எதிர்ப்பு பேரணி மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெற்றது. எங்கும் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. ஆனால் எமது ஆதரவாளர்கள் மீதே நாட்டில் ஆங்காங்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஜனவரி 10 ஆம் திகதி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது மக்களை கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டது.

அரசாங்கத்தின் சுமைகளை தொடர்ந்து மக்களால் தாங்கிகொண்டு இருக்க முடியாது. எவ்வித காரணமும் இன்றி தேர்தலை நடாத்தாமல் அரசாங்கம்பிற்போட்டு கொண்டிருக்கின்றது. தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் இந்த ஆட்சியாளர்களை உடனடியாக மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்.

பவித்திரா வன்னியாராச்சி எம்.பி.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டின் தேசிய சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. பாதாள உலக கோஷ்டியின் செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

மக்கள் மீது அதிக வரிச்சுமை சுமத்தியுள்ளனர் இதனால் இந்த ஆட்சியாளர்கள் மீது மக்கள் விரக்கியடைந்துள்ளனர்.

   
       
   
 

அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்தும் மட்டும் மக்களால் காத்திருக்க முடியாது. உடனடியாக தேர்தலை நடத்தினால் மக்கள் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவார்கள் என்றார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job