நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 5, 2018

பீதியில் கொழும்பு? வெடிக்கும் போராட்டத்தில் களமிறங்கும் முகமூடி குழுக்கள்...




ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இன்று கொழும்பில் முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிப் பேரணியில் 75000 பேர் வரையில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி இல்லம், அலரி மாளிகை உள்ளிட்டவை ஆர்ப்பாட்டக் காரர்களால் சுற்றிவளைக்கப்படவுள்ளதாகவும், ஆர்ப்பாட்டக் காரர்கள் அவற்றை தமது கட்டுப்பாட்டில் எடுக்கவுள்ளதாகவும் முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் பரிகார பூஜைகளும், தெய்வ பரிகார நடவடிக்கைகளும் அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸாரால் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டை பிளவுபடுத்துதல், இராணுவத்தினரை வேட்டையாடுதல், மத்தலை விமான நிலையத்தை விற்பனை செய்ய முயற்சி, சிங்கப்பூர் ஒப்பந்தம், வாழ்க்கைச் செலவு உயர்வு, அதிகரித்த வரிச் சுமை, மத்திய வங்கி பிணை முறி மோசடி, மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு பிற்போடுகின்றமை உள்ளிட்டவற்றுக்கு எதிராகவே ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுக்கவுள்ளது.

இதேவேளை அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிப் பேரணிக்கு எதிராக தடை உத்தரவு கோரி பொலிஸார் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மூன்று மனுக்கள் நேற்று நிராகரிக்கப்பட்டன.

   
       
   
  கோட்டை நீதிவான் நீதிமன்றில் கொள்ளுபிட்டி பொலிஸாரும், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் கறுவாத்தோட்டம் பொலிஸாரும் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் (இலக்கம் 4) வெலிக்கடை பொலிஸாரும் முன்வைத்த கோரிக்கைகளே இவ்வாறு நிராகரிக்கப்பட்டன.

எனினும் இன்று இறுதி முயற்சியாக கோட்டை பொலிஸார் ஊடாக தடை உத்தரவு பெறும் முயற்சிகளில் பொலிஸ் திணைக்களம் இறங்கியுள்ளது. அதன்படி இன்று கோட்டை பொலிஸார் கோட்டை நீதிவான் நீதிமன்றிடம் தடை உத்தரவொன்றினை கோரவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல்! 

கொழும்பில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் குழுவொன்றின் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடவத்தை பிரதேசத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் நடத்தப்படவுள்ள ஜனபலய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொடி கட்டியவர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

   
       
   
 

தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் உட்பட உறுப்பினர் குழுவொன்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மக்களை பலி எடுக்க கொழும்பு வரும் நாமல் தலைமையிலான குழுவினரின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கை ஐந்து நட்சத்திர ஜனநாயக நாடாகியுள்ளது. எந்தவொரு நபருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவிற்கு இலங்கை ஜனநாயக நாடாகியுள்ளமை விசேட அம்சமாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எதிர்ப்பை நடவடிக்கையினை மேற்கொள்ளும் நாமல் உட்பட பிரதான தலைவர்கள் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்களாகும்.

இந்த நபர்களுக்கு கடும் நிபந்தனையிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பிற்கு வருபவர்கள் திரும்பி செல்லவில்லை என்றால், அவர்களை எப்படி அனுப்ப வேண்டும் என எங்களுக்கு தெரியும். அடித்தால் அடிப்போம் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job