தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலைச் செய்வதற்கு சூழ்ச்சி
தங்களுக்கு எதிரான வழக்கை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றாவிடின், தாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக, அந்த உறுப்பினர்கள் மூவரும், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
எனினும், சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான அதிகாரம் தனக்கில்லையெனத் தெரிவித்த நீதிபதி, அந்த வழக்கை, அத்தருணத்திலேயே விசாரணைக்கு எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்தநிலையில்
ஏம் ஏ சுமந்திரனை கிளிநொச்சியில் வைத்து, 2016 ஆம் ஆண்டு படுகொலைச் செய்வதற்கு சூழ்ச்சி செய்தனர் என்று குற்றஞ்சாட்டி, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால், மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment