இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரபாகரனின் தாய், தந்தை இருவரும் சரணடைந்ததால் அதுதொடர்பான பொறுப்பை நாங்கள் நிறைவேற்றினோம்.
இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் கேர்ணல் ரமேஸ் உள்ளிட்ட சிலரை இராணுவத்தினர் கொலை செய்திருக்கலாம் என அண்மையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
யுத்தம்
சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்களை இராணுவத்தினர் கொலைசெய்ததாக இப்போது தெரிவிக்கின்றவர்கள். அந்தக் காலத்தில் ஏன் இதனை தெரிவிக்காமல் மறைத்தனர் என்று கேட்கின்றேன்.
இதனால் இந்த பிரசாரமானது மிகவும் பயங்கமானதாகும். அதனால் இது தொடர்பில் எதிர்காலத்தில் அவரிடம் வாக்குமூலம் எடுக்கலாம் என்றார்.
0 comments:
Post a Comment