கிளிநொச்சி கந்தபுரம் பாடசாலை மாணவிகள் மூவர் பிஸ்கட் சாப்பிட்ட பின்னர் மயக்கமடைந்து விழுந்த சம்பவம்
அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது.
இந்நிலையில் அந்த பிஸ்கட்டில் ஏதோ ஒரு வகையான போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கந்தபுரம் பாடசாலை மாணவிகள் மூவர் பாடசாலைக்கு அருகிலுள்ள கடையில் பிஸ்கட் பக்கட்டை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட சற்று நேரத்தில் மூவரும் மயக்கமடைந்த நிலையில் விழுந்துள்ளனர். உடனடியாக அவர்கள் அக்கராயன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு விஷமாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு பிஸ்கட் மாதிரிகளை சுகாதார
பரிசோதகர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
எனினும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வர்த்தகம் முன்னெடுக்கும் வகையில் இந்த பிஸ்கட் விற்பனை செய்யப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment