உலகிலுள்ள விசித்திரமான ஹோட்டல்களில் முதல் பத்து இடங்களுக்குள் இலங்கையிலுள்ள ஹோட்டல் ஒன்று தெரிவாகி உள்ளது.
உலகின் முதல் 10 விசித்திரமான ஹோட்டல்களின் தரவரிசையை TripAdvisor வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் பயண மதிப்பீடுகள், மதிப்பீடுகளின் தரம் மற்றும் பயணிகள் பயணிக்கும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த பட்டியலில் இலங்கை ஹோட்டல் ஒன்று 8வது இடத்தை பிடித்துள்ளது.
இலங்கையின் புத்தல பகுதியில் உள்ள கும்புக் நதி ஹோட்டலே இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
யால தேசிய பூங்காவுக்கு அருகில், அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உள்ள இந்த ஹோட்டலில் ஒரு நாள் இரவுக்கு 186 டொலர் அறவிடப்படுகின்றது.
யானை வில்லா என்று அழைக்கப்படும் இந்த ஹோட்டல், பயணிகளினால் அதிகம் விரும்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு பெரிய இரண்டு படுக்கை அறைகள் உள்ளது. இங்கு 8 பேர் உறங்க முடியும். மேல் பகுதி திறந்த நிலையில் காணப்படும். குளியல் அறைக்கு நடுவில் மரம் ஒன்று காணப்படும்.
தொலைக்காட்சி மற்றும் இணையவசதி இன்றி அமைந்துள்ள இந்த ஹோட்டலில், அமைதியாக தங்கிவிட்டு செல்வதற்கான சூழல் உள்ளமையே முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது.
பல நட்சத்திர ஹோட்டல்களுக்கு அப்பால் இயற்கையுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விநோத ஹோட்டல் உலகளாவிய ரீதியில் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment