தியாக தீபம் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம்,
இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக ஜந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவுத் தவிர்ப்பு போராட்டம் செய்து வீர காவியமான தியாக தீபன் லெப்ரினன் கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் உள்ள அவரது நினைவுத் தூபிக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இந்த நிகழ்வுகளை 9.00 மணியில் இருந்து ஆரம்பித்திருந்தனர்.
இதனிடையே இந்த நிகழ்வுகளில் தமிழரசு கட்சியைச் சேர்ந்த வட மாகாண சபை உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் யாழ் மாநகர சபையின் புளொட் உறுப்பினர் ஒருவரும் இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது அவ்விடத்தில் வைத்து வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட முயற்பட்டதுடன், அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் ஒலிபெருக்கியின் பாடல் சத்தத்தை அதிகரித்ததாக அங்கிருந்த எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விடத்தில் வைத்து அரசியல் பேச வேண்டாம் என அங்கிருந்த இளைஞர்கள் வட மாகாண சபையின் அவைத் தலைவரை நோக்கி கூறி போது, தீலிபனுக்கான நினைவுத் தூபியை தாமே கட்டியதாகவும் தாம் எதுவும் செய்வேன் எனவும் சி.வி.கே சிவஞானம் பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து சி.வி.கே சிவஞானம், ஜனநாயக போராளிகள் கட்சியினர் மற்றும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த யாழ் மாநகர சபையின் புளொட் உறுப்பினர் ஆகியோருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
ஜனநாயக போராளிகள் கட்சியால் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் 10 மணியளவில்
0 comments:
Post a Comment