நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, September 15, 2018

38 முறை கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட இளம்பெண்: அதிர்ச்சி சம்பவம்!




மத்தியபிரதேச மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை 38 முறை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் உள்ள மீடியா துறையில் வேலை செய்து வருபவர் சுப்ரியா ஜெயின் (25). இவர் அங்கு விடுதி ஒன்றில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று விடுதியை நோக்கி வந்த கமலேஷ் சாஹு என்ற இளைஞர் திடீரென தன் கையில் வைத்திருந்த கத்தியை

   
       
   
  கொண்டு 38 முறை கொடூரமாக, சுப்ரியாவின் மீது குத்தியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இரண்டு இளைஞர்கள் உடனடியாக அவரச பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த சுப்பிரியவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் குற்றவாளி கமலேஷை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சுப்பிரியாவும் கமலேஷும் பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளார்.

கடந்த 6 வருடங்களுக்கு முன்னதாக கமலேஷ், சுப்பிரியவிடம் தன்னுடைய காதலை கூறியுள்ளார். ஆனால் சுப்ரியா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பின்னர் இந்தூரில் வேலை கிடைத்ததும், சுப்ரியா இங்கே வந்துவிட்டார்.

இதற்கிடையில் சுப்ரியாவின் இருப்பிடம் தெரியாமல் தவித்த கமலேஷ் ஒருவழியாக முகப்புத்தகத்தில் சுப்ரியாவை கண்டுபிடித்தார்.

முகப்புத்தகத்தில் பேச முயற்சித்தபோது கமலேசை சுப்ரியா பிளாக் செய்துள்ளார்.

   
       
   
  மேலும் வேறு சில ஆண்களுடன் சுப்ரியா சுற்றித்திரிவதை பார்த்த கமலேஷிற்கு சகித்துக்கொள்ள முடியவில்லை.

இதனால் தான் இப்படிப்பட்ட ஒரு செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்ரியா, வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்திய தண்டனை சட்ட பிரிவு 302-ன் கீழ் காமேலேஷ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment