நுவரெலியா மாவட்டம் இராகலை-சென்ட் லெனாட் பிரதேசத்தில் உள்ள வனப் பகுதியில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராகலை – சென்லெனாட் தோட்டத்தை சேர்ந்த 29 வயதான இளைஞரினதும் மெதவத்த பகுதியை சேர்ந்த 31 வயதான இளைஞரினதும் சடலங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டில் உள்ள குகைப் பகுதியிலிருந்தே குறித்த இருவரதும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் இருவரும், விலங்குகளை வேட்டையாடுவதற்காக நேற்று வீட்டிலிருந்து சென்றுள்ளதாகவும் இவர்களுடன் நாயும் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த நபர்களோடு நாயும் இறந்து காணப்பட்டுள்ளது. இவர்கள் முள்ளம்பன்றியை வேட்டையாடுவதற்காக குகை உள்ளே புகையை விசிறிவிட்டுச் சென்றதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இராகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு!
மேற்படி சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் ராகலை சென்லியாட்ஸ் மத்திய பிரிவை சேர்ந்த 31வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான அசோக்குமார் என்பவரும் மற்றய நபர் சென்லியாட்ஸ் கனிக்கா தோட்டபகுதியை சேர்ந்த 29வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரத்னேஸ்வரன் என்பவருமென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் ராகலை சமிகிபுற வனப் பகுதியில் இருந்து சடலமாக மீட்கபட்டதாக ராகலை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் நேற்று சனிகிழமை மாலை வரை வீட்டுக்கு திரும்பாதமை குறித்து ராகலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்று பதிவு செய்யபட்டது.
இதற்கமைய இராகலை சென்லியாட்ஸ் தோட்ட மக்கள் மற்றும்
பொலிஸார் இனைந்து குறித்த இரண்டு பேரையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போதே குறித்த இரண்டு பேரின் சடலங்களும் சமிகிபுற வனகபகுயில் உள்ளகுகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டன.
நீதவானின் மரணவிசாரனைகள் இடம் பெற்றவுடன் இரண்டு சடலங்களும் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
0 comments:
Post a Comment