இது தொடர்பில் அப்பகுதியில் கடமையில் இருக்கும் யாழ். மாநகர சபை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், வரியிறுப்பாளர்கள், காவற்துறையினர் ஆகியோரிடம் ஆலயத்திற்கு வந்த பலரும் முறையிட்டுள்ளனர். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறிப்பாக நல்லூர் உற்சவகால கடைகள் முன்பாக சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறு குழந்தைகளோடு ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறு விற்பனையில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் மிகுந்தலையைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த விற்பனையில் ஈடுபடும் அனைத்து சிறுவர்களும் தமது பெற்றோர் அல்லது உறவினர்களுடனே உற்சவகால கடைகள் முன்பு காணப்படுகின்றார்கள். பெற்றோர் சிறுவர்களிடம் ஊதுபத்தியை கொடுத்து விற்பனை செய்து வருமாறு அனுப்புகின்றார்கள். கடைகள் அமைந்திருக்கும் வளாகத்தில் நிற்கும் பக்தர்கள் சிறுவர்களின் பச்சிளம் முகத்தைப்பார்த்து ஊதுபத்தியை வாங்கி செல்கின்றனர்.
இங்கு வியாகார நடவடிக்கையில் ஈடுபடும் சிறுவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்களுடன் கலந்துரையாடிய போதுதாம் வெளிமாவட்டத்திலிருந்து வந்திருப்பதாகவும் யாழ் நகரிலுள்ள ஐந்து சந்தி விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாகவும் தமது குடும்பத்தின் வறுமை காரணமாக தமது உறவினர்களுடன் இங்கு வந்து நின்று விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment