நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, September 4, 2018

பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோருவது எப்படி? Share பண்ணுவிட்டு படியுங்கள்!





துன்புறுத்துதலைக் கண்டு பயந்துகொண்டு உங்கள் சொந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் நீங்கள் பாதுகாப்பாக வாழ முடியாது என்ற சூழல் நிலவுமாயின் நீங்கள் இங்கிலாந்தில் அகதித் தஞ்சம் கோரமுடியும்.

இந்தத் துன்புறுத்தல் பின்வரும் காரணங்களால் ஏற்பட்டவையாக இருக்க வேண்டும்:


1. உங்கள் இனம்
2. உங்கள் மதம்
3. உங்கள் நாடு
4. உங்கள் அரசியல் கருத்து
5. உங்களுடைய நாட்டில் சமூக, கலாச்சார, மத அல்லது அரசியல் நிலைமை, உதாரணமாக, உங்கள் பாலினம், பாலின அடையாளம் அல்லது பாலியல் சார்பு ஆகியவற்றின் காரணத்தால் உங்கள் பாதுகாப்பு ஆபத்துகுளக்கப்படுள்ளது என்ற சூழலில்.

மேலும் உங்களுடைய சொந்த நாட்டில் அதிகாரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற உங்களால் முடியவில்லை என்ற நிலமை இருக்க வேண்டும்.


UN high commissioner for refugees Filippo Grandi (C) he speaks with Syrian refugee Bashar (2nd L) and his family during his visit in the refugee camp of Lagadikia some 40km North of Thessaloniki
இதே வேளையில் பின்வரும் காரணிகள் காணப்படுமாயின் உங்கள் அகதிக் கோரிக்கை மறுக்கப்படலாம் :

1. நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலிருந்து வந்தவர்; அல்லது


2. உங்களுக்கு தொரடர்புடைய இன்னுமொரு நாட்டில் நீங்கள் தஞ்சம் கோரலாம், உதாரணமாக நீங்கள் பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன் ஐரோப்பிய நாடு ஒன்றில் தஞ்சம் கோரியிருந்தால்.

உங்களை சார்த்துள்ளவர்கள்

உங்கள் புகலிட கோரிக்கையில் உங்களை சார்ந்துள்ள உறவினர்ககளையும் ( கணவன் அல்லது மனைவி மற்றும் 8 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கும்) சேர்த்துக்கொள்ளலாம். அதே வேளை அவர்களுக்கு உங்களுக்கு உள்ளதைவிட வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணம் இருக்குமாயின் அவர்களும் தனியாக புகலிட கோரிக்கை மேற்கொள்ளலாம்.


LESVOS GREECE February 02 2016: Refugees arriving in Greece in dinghy boat from Turkey. These Syrian Afghanistan and African refugees land their boat near Mytilene Lesvos.
நீங்கள் வழங்க வேண்டிய ஆவணங்கள்

நீங்கள் தஞ்சம் கோரும் பொழுது பின்வரும் ஆவணங்களை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளிடம் கையளிக்க வேண்டும் (உங்களிடம் இருந்தால்):

1. கடவுச்சீட்டு மற்றும் பயண ஆவணங்கள்;
2. காவல்நிலைய பதிவு சான்றிதழ்கள்;
3. அடையாள ஆவணங்கள், உதாரணமாக அடையாள அட்டைகள், பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் அல்லது பள்ளிப் பதிவுகள்.



எப்படி உங்களின் புகலிட கோரிக்கையை பதிவு செய்வது?

நீங்கள் புகலிட கோரிக்கை கோரும் பொழுது உள்துறை அமைச்சு உங்களை புகலிட கோரிக்கை பரிசோதனைக்கு (asylum screening) முதலில் அழைக்கும். இது ஒரு குடிவரவு அதிகாரியுடனான சந்திப்பாகும், அங்கு உங்களை பற்றி நீங்கள் உள்துறை அமைச்சுக்கு சுருக்கமாக கூற ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும், மேலும் நீங்கள் எப்படி பிரித்தானியாவுக்குப் பயணம் செய்தீர்கள் என்ற தகவலும் பெறப்படும்.


Harbour border control observing the people arriving at the borders of the united kingdom
உங்கள் புகலிட கோரிக்கை பரிசோதனையில்:

நீங்கள் புகைப்படம் எடுக்க வேண்டும்
உங்கள் கைரேகை எடுத்துக்கொள்ளப்படும்
நீங்கள் யார் என்பதையும் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதையும் சரிபார்க்க ஒரு நேர்காணல் செய்யப்படும்
நீங்கள் ஏன் தஞ்சம் கேட்க வேண்டும் என உங்களிடம் கேட்கப்படும். உங்கள் கோரிக்கையை ஆதரிப்பதற்கு எழுதப்பட்ட ஆதாரங்களை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் (copy of the screening interview).

நீங்கள் அல்லது உங்களைச் சார்ந்தவர்கள் ஏதேனும் மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்களா என்றும் அதோடு சம்பந்தப்பட்ட மருத்துவ தகவல்களையும் தெரிவிக்க வேண்டும்.  
   
       
   
 


நீங்கள் ஒரு ஆண் அல்லது பெண் நேர்காணல் செய்பவரை தேர்வு செய்யலாம் ஆயினும், உங்கள் விருப்பம் எல்லா சந்தர்ப்பங்களிலும் நிறைவேற்றப்படும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.

பிரிந்தனிய எல்லையில் அகதிக் கோரிக்கை விடுத்தல்


Child locked in a cage. Refugees conflict concept.
பிரித்தானிய எல்லையில் நீங்கள் அகதிக் கோரிக்கை செய்வதை பிரித்தானிய எல்லையில் உள்ள அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவையென்றாலும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

பிரித்தானியாவில் உள்துறை அமைச்சுக்கு சென்று தஞ்சம் கோருதல்

பிரித்தானியாவுக்குள் நீங்கள் நுழைந்து விட்டாள் பொதுவாக சந்திப்பு முன்பதிவை (prior appointment ) மேற்கொண்ட பின்னர் தான் நீங்கள் நேர்காணலுக்கு செல்ல முடியும், ஆயினும் உங்களுக்கு தங்குவதற்கு எந்த இடமும் இல்லையெனில் நீங்கள் அப்படி சந்திப்பு முன்பதிவு இல்லாமல் செல்லலாம் .

தொலைபேசி எண்: 0044(0)20 8196 4524
Monday to Thursday, 9am to 4:45pm
Friday, 9am to 4:30pm

நீங்கள் கொண்டு வரவேண்டியவை:


A British (UK) Passport laying on Euro notes.
1. உங்கள் விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்

2. உங்களுடன் சேர்ந்து புகலிடம் கோருகின்ற உங்களை சார்ந்தவர்கள் (18 வயதுக்குட்பட்டோரும் பிள்ளைகளும்)

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நீங்கள் புகலிட கோரிக்கை பரிசோதனை நிலையத்துக்கு செல்லலாம் (asylum screening unit) . உங்கள் முடிப்பதற்கு போதுமான நேரம் இருப்பதை உறுதிசெய்யவைத்துக் கொள்ளவது ஆலோசனைக்குரியது.


புகலிட கோரிக்கை பரிசோதனை அலகுகில் இருந்து நிதி உதவி பெற முடியாது.

நேர்முக சந்திப்பை எப்படி மேற்கொள்ளுவது?

புகலிட கோரிக்கை பரிசோதனை நிலையத்தை தொடர்வுகொள்வதன் மூலம் புகலிட கோரிக்கை பரிசோதனைக்கான நியமனத்தை பெற்றுக் கொள்ளலாம்.

தஞ்சம் திரையிடல் அலகு நியமனங்கள்
தொலைபேசி: 020 8196 4524
திங்கள் முதல் வியாழன் வரை, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
வெள்ளிக்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பொதுவாக அவர்கள் உங்களை திருப்பி அழைப்பார்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எளிமையான கேள்விகளை கேற்பார்கள். நீங்கள் ஏன் புகலிடம் கோருகிறீர்கள் என்று கேட்கப்பட மாட்டாது . அழைப்பு 30 நிமிடங்கள் ஆகலாம்.

நீங்கள் வீட்டு உதவி தேவைப்பட்டால் அதிகாரிகளிடம் கோரலாம்.

உங்கள் புகலிட கோரிக்கை பரிசோதனைக்காக ஒரு மொழிபெயர்ப்பாளரை நீங்கள் கேட்கலாம்.

உங்கள் சந்திப்பு தேதிக்கு முன் உங்கள் நிலைமையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் சந்திப்பு சேவைக்கு தெரியப் படுத்துங்கள், உதாரணமாக, நீங்கள் வாழும் முகவரியில் மாற்றம் எற்பட்டால்..

உங்கள் முதல் நேர்காணலைத் தொடர்ந்து உங்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்படும்.


Depressed young boy sitting alone behind a chain link fence
சில சந்தர்ப்பங்களில் உள்துறை அமைச்சு உங்களை தடுத்து வைப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு. இச்சந்தர்பங்களில் நீங்கள் உங்கள் அகதிகோரிக்கை பரிசீலிக்கப்படும் வரை தடுத்து வைக்கப்படலாம். உங்கள் அகதி கோரிக்கை சாதகமாக பரிசீலிக்கப்பட்டால் உங்களை விடுதலை செய்வார்கள் அதேவேளையில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் உங்கள் மேல்முறையடில் இறுதி முடிவெடுக்கும் வரை நீங்கள் தடுத்து வைக்கப்படலாம்.
சில சந்தர்ப்பங்களில் பல காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டவர் விடுதலை செய்யப்படுவதும் உண்டு.

நீங்கள் வழக்கமாக பிவரும் சந்தர்ப்பங்களில் தடுத்து வைக்கப்படமாடீர்கள். நீங்கள்:


ஒரு குழந்தை
முதியோர்
குழந்தைகள் ஒரு குடும்பம்
கர்ப்பிணி
மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர் என ஏற்றுக்கொள்ளப்பட்டால்
சித்திரவதைக்கு சுதந்திரமான ஆதாரங்களை வழங்க முடியும் நிலையில் உள்ளிர்கள்
நிர்வகிக்கப்பட முடியாத ஒரு மனநிலை அல்லது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளீர்கள் அல்லது குடிவரவு நீக்க நிலையத்தில் உள்ளவர்களுக்கு ஆபத்து அளிக்கின்ற நிலையில் உங்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அகதி கோரிக்கையை பரிசீலிக்கும் நேர்காணல்


Group of business people and lawyers discussing contract sitting at the table. Woman chief is signing papers.
முதல் நேர்காணலுக்கு அடுத்து முழு நேர்காணலுக்கான அழைப்பு எழுத்து மூலம் அறிவிக்கப்படும். இந்த நேர்காணலுக்கு நீங்கள் தகுந்த காரணம் இல்லாமல் போகவில்லையினின் உங்கள் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இந்த நேர்காணலுக்கு முன்னர் நீங்கள் உங்கள் அகத்திக் கோரிக்கை நிரம்பிய வாக்குமூலத்தை உங்கள் வழக்கை கையாளுகின்ற அதிகாரிக்கு அனுப்பிவைக்கலாம். ஆயினும் இது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.


Businessman pressing an Attorney concept button on a screen.
நேர்காணலில் உங்களிடம் தனிமையிலேயே கேள்விகள் கேற்கப்படும் ஆயினும் உங்களுக்கு ஒரு முழிபெயப்பாளர் வழங்கப்படும். நீங்கள் உங்கள் சட்டத்தரணியை உங்களுடன் அழைத்து வரலாம். ஆனால் அவர் நேர்காணலில் இடையூறளிக்க முடியாது. அதே வேளையில் உங்கள் சட்டத்தரணி வர தாமதமானால் நேர்காணல் அவர் இல்லாத சூழலிலும் தொடர்ந்து நடைபெறும்.

நேர்காணலின் பொழுது நீங்கள் கொடுமைப்படுத்தப்பட்டீர்கள் அல்லது எப்படி பாதிக்கப்படிர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். மேலும் உங்களுக்கு ஏன் உங்கள் நாட்டுக்கு திருப்பிப் போகமுடியாது என்பதையும் தெரிவிக்கவேண்டும். உங்களை உள்துறை அதிகாரி கடினமான கேள்விகளை கேட்ட நேரிடலாம் ஆயினும் நீங்கள் தெளிவான முழுத்தகவலையும் வழங்க வேண்டும்.

பொதுவாக உங்கள் அகதி கோரிக்கையின் முடிவுகள் ஆறு மாத காலத்தில் உங்களுக்குல் தெரிவிக்கப்படும். ஆயினும் உங்கள் வழக்கு கடினமானதாக அல்லது சிக்கலானதாக இருந்தால் ஆறு மாதகாலத்துக்கு மேல் எடுக்கலாம்.

அகதி அந்தஸ்துக்கிடைத்து பிரித்தானியாவில் வாழ்வதற்கு உரிமை

உங்களுக்கும் உங்களை சார்ந்துள்ளவர்களுக்கும் ஐந்து வருடங்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படும் அதனைத் தொடர்ந்து நீங்கள் நிரந்தர வதிவுருமை பெற விண்ணப்பம் செய்யலாம்.

மனதாபிமான அடிப்படையிலான பதிவுருமை

நீங்கள் அகதி அந்தஸ்துக்கு தகுதி பெறவில்லையெனில் மனிதபிமான அடிப்படையிலான வதிவுரிமை வழங்கப்படலாம். ஐந்து வருடங்களில் நீங்கள் நிரந்திர பதிவுருமைக்கு விண்ணப்பம் செய்யலாம்.

மற்றய காரங்களுக்கான வதிவிருமை

அகதித் தஞ்சம் கிடைக்கவில்லையெனில் சில சந்தர்ப்பங்களில் உங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக பிரித்தானியாவில் இருப்பதற்கு வதிவிருமை வழங்கப்படலாம். காலத்துக்கு இந்த வதிவுரிமை வழங்கப்படும் என்பது உங்கள் தனிப்பட்ட நிலையை வைத்து உள்துறை அமைச்சால் முடிவு செய்யப்படும்.

நீங்கள் பிரித்தானியாவில் தஞ்சம் பெறுவதற்கு எந்த காரணமும் இல்லை


நீங்கள் பிரித்தானியாவில் தஞ்சம் பெறுவதற்கோ அல்லது வேறு ஒரு மனிதாபிமான அடிப்படையிலான காரணங்கள் ஏதும் இல்லையெனில் நீங்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறும் படி அறிவுறுத்தப்படுவீர்கள்.


London UK – Central Criminal Court also known as Old Bailey. Justice statue.
இந்த சூழலில் நீங்கள் குடிவரவு தீர்ப்பாயதுக்கு (first-tier tribunal)முறையீடு செய்யலாம். உங்கள் மேல் முரையீடு சாதகமாக அமையும் தருணத்தில் உங்களக்கு பிரித்தானியாவில் இருப்பதற்கு வதிவுரிமை வழங்கப்படலாம்.

உங்கள் மேல்முறையீடு மறுக்கப்பட்டால் நீங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு (upper tribunal) மேல்முறையயீடு செய்யலாம்.

புதிய அகதி கோரிக்கை (fresh claim)

உங்கள் அணைத்து அகதிகோரிக்கைகளும் மறுக்கப்பட்டாலும் நீங்கள் முதலில் அகதி அந்தஸ்து கோரிய பொழுது உங்களுக்கு இல்லாத சூழல் அல்லது உங்கள் முதல் அகதி கோரிக்கைக்கு ஆதரவாக புதிய ஆவணங்கள் மற்றும் தகவல் கிடைக்கப்பெற்றால் நீங்கள் புதிய அகதிகோரிக்கையை மேற்கொள்ளுவதற்கு சட்ட தகமை உள்ளது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job