நீதிமன்றத்திற்கு கல்லெறிந்து சட்டத்துறையினை அவமதித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் இதுவரையில் அரசாங்கமோ, நீதித்துறையோ எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
ஆனால் இராணுவத்தினரது உரிமைகளை பாதுகாக்க குரல் கொடுத்த பௌத்த தேரருக்கு கடூழிய
சிறை தண்டவை வழங்கியுள்ளமையானது பௌத்த மத கோட்பாடுகளுக்கு முரணானதாகும் பொதுபல சேனா அமைப்பின் பேச்சாளர் சுதினாநந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம்சாட்டி ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளமையானது சட்டத்தின் பார்வையில் ஏற்றுக்கொள்ள கூடியதாக காணப்பட்டாலும், பொதுவான விடயங்களின் பார்வையில் முரணானதாகவே காணப்படுகின்றது.
நீதிமன்றத்தினை அவமதித்தவர்கள் இன்று அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களில் காணப்படுகின்றனர்.
நீதிமன்றத்திற்கு கல்லெறிந்து சட்டத்துறையினை அவமதித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் இதுவரையில் அரசாங்கமோ, நீதித்துறையோ எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
ஆனால் இராணுவத்தினரது உரிமைகளை பாதுகாக்க குரல் கொடுத்த பௌத்த தேரருகு கடூழிய சிறை தண்டவை வழங்கியுள்ளமையானது பௌத்த மத கோட்பாடுகளுக்கு முரணானதாகும்.
தேசிய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் பௌத்த மதம் முற்றாக
அழியும் நிலையில் காணப்படுகின்றது. சர்வதேசத்தின் சில ஒரு தலைப்பட்சமான நோக்கங்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர்கள் இன்று முகவர்களாக செயற்படுகின்றனர்.
இதன் ஒரு கட்டமே ஞானசார தேரரின் சிறைவாசம் . வடக்கிற்கு ஒரு சட்டவொழுங்கும் தெற்கில் பிறிதொரு சட்டவொழுங்கும் பின்பற்றப்படுகின்றது.
பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment