தனது தாயின் கையடக்க தொலைபேசியில் சமூக ஊடகங்களை பயன்படுத்திய 12 வயது சிறுமியொருவர், பேஸ்புக் காதலனை நம்பி வீட்டை விட்டு புறப்பட்டு, 2 பேரால் வல்லு றவுக்குள்ளாகப்பட்டுள்ளார்.
அவிசாவளை, திட்டப்பட்டறையில் வசிக்கும் 12 வயது 5 மாத சிறுமியே பாதிக்கப்பட்டவர்.
இந்த சிறுமி தனது தாயின் கையடக்கத் தொலைபேசியில் சமூக ஊடகங்களில் உலவிக்கொண்டிருந்தார்.
சமூக ஊடகங்களை பற்றி சிறுமிக்கு அதிக அறிவு இல்லாவிட்டாலும், தனது பாடசாலை நண்பிககள் கையடக்க தொலைபேசியில் சமூக ஊடக வலைப்பின்னல்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார்.
தொடர்ந்து தனது தாயின் கைப்பேசியில் சமூக வலைதளங்களை பயன்படுத்திய இந்த மாணவிக்கு இளைஞர் ஒருவர் அறிமுகமாகினார். அந்த இளைஞனுக்கு 23 வயது. இவர் ஹொரண பிரதேசத்தில் வசிப்பவர்.
விரைவில் இருவரும் காதல் வசப்பட்டனர். இருவரும் விரைவில் சந்திக்க விரும்பினார்கள். குறித்த இளைஞனை சந்திப்பதற்காக அவிசாவளை திட்டப்பட்டறையில் இருந்து ஹொரணைக்கு செல்ல சிறுமி தயாராகியுள்ளார். இந்த விஷயம் அவரது வீட்டில் யாருக்கும் தெரியாது.
அவிசாவளையில் இருந்து சிறுமி பேருந்தகளில் பயணித்து ஹொரணைக்கு சென்றிருந்த போதும் அவரது முகநூல் காதலன் அங்கு இருக்கவில்லை. சிறுமி அவரை தொடர்பு கொள்ள முடியாமல், வீடு திரும்ப முடிவு செய்தார்.
ஹொரணையில் இருந்து பாதுக்க செல்லும் பஸ்ஸில் சிறுமி ஏறியுள்ளார். பின்னர் பாதுக்கவிலிருந்து அவிசாவளையை அடைய ஹன்வெல்ல பேருந்தில் ஏறினார். ஹங்வெல்லக்கு வந்து அங்கிருந்து பஸ்ஸில் அவிசாவளைக்கு வந்து கிராமத்திற்கு வர திட்டமிட்டிருந்தார், ஆனால் நடந்தது வேறு.
பாதுக்கவிலிருந்து ஹன்வெல்ல நோக்கிப் பேருந்தில் பயணித்த இந்த சிறுமி அங்கு பயணித்த இளைஞர் ஒருவரை சந்தித்துள்ளார். இவர் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர். இவர் இரவு பணியை முடித்து விட்டு தங்குமிடத்துக்கு செல்வதற்காக இந்த பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்த இளைஞன் சிறுமியுடன் பேச்சுக்கொடுத்து, அவர் ஏதோ வருத்தத்தில் இருப்பதை மிக நுட்பமாக அறிந்தார். சிறுமி தனக்கு நடந்ததை அந்த இளைஞனிடம் கூறினார். தந்திரமான இளைஞன் அவரை பேருந்தில் இருந்து இறக்கி, சிறுமியை தன் தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்றார்.
தங்குமிட உரிமையாளரிடம், தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் என்று கூறி ஏமாற்றினார். இந்த சிறுமியின் வயது குறித்து தங்குமிட உரிமையாளர்களுக்கு சந்தேகம் இருந்தாலும், இந்த சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்துள்ளதாக அந்த இளைஞன் கூறினார்.
அன்றிரவு இளைஞனுடன் தங்கிய சிறுமி, பலா த்காரம் செய்யப்பட்டார். மறுநாள் காலை சிறுமி வீட்டிற்கு செல்ல தயாராகிய போது, கிராமத்திற்கு செல்வதால் ஹங்வெல்லக்கு வந்து சிறுமியை பஸ்ஸில் ஏற்றிவிட முடியாது என கூறிய இளைஞன், முச்சக்கர வண்டியை கொண்டு வந்து சிறுமியை ஹன்வெல்லக்கு அழைத்துச் சென்று அவிசாவளைக்கு பஸ்ஸில் ஏற்றிவிடுமாறு சாரதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். . கோரிக்கையை ஏற்று சாரதி சிறுமியை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு ஹன்வெல்ல நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
வழியில், முச்சக்கரவண்டியின் சாரதி சிறுமியுடன் பேசியுள்ளார், ஏனெனில் சிறுமி ஒருவித சிக்கலில் இருப்பது அவரது முகத்தில் தெரிந்தது. முச்சக்கர வண்டி ஓட்டுனரும் தந்திரமானவர். சிறுமியை முச்சக்கர வண்டியில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதே வீட்டில் முச்சக்கர வண்டி சாரதியால் சிறுமியும் துஷ்பி ரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி ஹங்வெல்லயில் இருந்து அவிசாவளை செல்லும் பஸ்ஸில் ஏறி திட்டப்பட்டறை வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ளவர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். சிறுமியுடன் தாய் பாதுக்க பொலிஸாருக்குச் சென்று சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்தின் பிரகாரம் பாதுக்க பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பிரதான சந்தேகநபரான ஆடைக்கடை ஊழியர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே மிதெதனிய, ஜூலம்பிட்டிய பகுதிக்கு சென்றிருந்தார். இதனையடுத்து அங்கு சென்ற பாதுக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் மித்தெனிய பொலிஸாரின் உதவியுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சிறுமியை துஷ்பி ரயோகம் செய்த முச்சக்கரவண்டி சாரதியும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment