காணாமல் ஆக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் வழக்கின் தீர்ப்புக்கு எதிராக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இராணுவம் தடை உத்தரவை பெற்றுள்ளதாக ஈழத்தமிழர் சுயாட்சிக்கழக தலைவர் அனந்தி சசிதரன் (Ananth Sasidharan) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மே 18 ஆம் திகதி என்பது சிலருக்கு பொழுதுபோக்காகவே வியாபாரமாகவும் மாறியுள்ளது என்றும் தன்னால் குறித்த நாளை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது என்றும் வேதனையில் இருந்து வேதனையில் இருந்து மீள முடியாது என அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நீதியை நாட வேண்டிய நிலை
இராணுவத்தினரிடம் தாம் சரணடைந்த போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் பலரும் இராணுவத்தில் சரணடைந்ததை தான் கண்டதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இருவரை தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, உள்நாட்டு பொறிமுறைகளை நம்புங்கள் என கூறப்பட்டாலும் அதிலும் நாங்கள் நீதி கிடைக்காத மக்களாக தான் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அதனால் தான் சர்வதேச நீதியை நாட வேண்டிய நிலை காணப்பட்டதாகவும் ஆனால் சர்வதேசமும் எங்களை வைத்து அரசியல் செய்கின்ற ஒரு நிலை உள்ளதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment