யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள். இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சீற்றால் கூரையிடப்பட்டிந்த வீட்டில் கூரையில் ஏறி சீற்றை உடைத்தே கொள்ளையர்கள் கீழே இறங்கி மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
தனிமையில் இருக்கும் வயதானவர்களையும் பெண்களையும் கொள்ளையர்கள் தற்போது குறி வைத்து வருகின்றார்கள். குறித்த வீட்டில் மூதாட்டி தனிமையில் வசித்து வந்துள்ளார். இரு ஆண் பிள்ளைகளில் ஒருவர் வெளிநாட்டிலும் இன்னொருவர் கோண்டாவில் பகுதியிலும் வசித்து வந்துள்ளார்கள். மூதாட்டி தனிமையில் இருக்க விரும்பியதாலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. வயதானவர்கள் தமது பாதுகாப்புக்காக பிள்ளைகளுடனோ அல்லது வேறு பாதுகாவலர்களுடனோ தங்குவது மிகவும் பாதுகாப்பானது.
0 comments:
Post a Comment