ஈரானிய (Iran) ) அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதான அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அஸர்பைஜான் (Azerbaijan) நாட்டு எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, ரைசியுடன் ஈரானின் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோலாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
ரைசியின் உடல்நிலை
அசர்பைஜான் - ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கை புதிதாக அணை கட்டப்பட்டுள்ள அணை திறப்பு விழாவிற்காக இப்ராகிம் ரைசி இன்று அசர்பைஜான் சென்றிருந்தார்.
Helicopter Carrying Iran President Raisi Crashed
நாடு திரும்பிக்கொண்டிருந்த இப்ராகிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாக கருத்தப்படும் பகுதியில் கடுமையான மழை மற்றும் பனி மூட்டம் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதாமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டு உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் சம்பவத்தை விபரிக்க "விபத்து" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளதுடன் அரச ஊடகம், ரைசியின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை.
0 comments:
Post a Comment