சிறிலங்கன் விமான சேவை (SriLankan Airlines) நிறுவனத்தின் பணியாளர்கள் இன ரீதியான மற்றும் உருவக் கேலிக்கு உள்ளாவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சிறிலங்கன் விமான சேவை நிறுவனப் பணியாளர்கள் கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விமானங்கள் குத்தகை
சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானங்களில் தொடர்ச்சியாக நிலவி வரும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, பெல்ஜியம் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
Srilankan Airline Employees Complain Air Belgium
குத்தகைக்கு எடுக்கப்பட்ட எயார் பெல்ஜியம் நிறுவனத்தின் விமானங்களில் குறைந்தபட்சம் 4 பணியாளர்கள் அந்த விமான சேவையின் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பயன்படுத்தப்படும் எயார் பெல்ஜியம் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களில் சிறிலங்கன் விமானப் பணியாளர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணைகள் ஆரம்பம்
சிறிலங்கன் விமான சேவை விமானிகள் மற்றும் பணியாளர்கள் எயார் பெல்ஜியம் விமான சேவையின் பணியாளர்கள் சிறிலங்கன் விமான சேவை நிறுவனப் பணியாளர்கள் உருவக் கேலி மற்றும் இன ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Srilankan Airline Employees Complain Air Belgium
சிறிலங்கன் விமான சேவை நிறுவன விமானிகளுக்கான ஆசன ஒதுக்கீடுகளின் போதும் பாரபட்சம் காண்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment