தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாலானவர் என மெலனி திசநாயக்கா வெளியிட்டுள்ளார்.ஒரு சிங்கள பெண்ணுக்கு இருக்கின்ற புலிகள் மீதான பார்வை. தமிழ் துரோகிகளிடம் இல்லை
நான் ஒரு சிங்களக்குடிமகளாக இலங்கையரசு எங்களிற்கு அளித்த பொய்யான கருத்துருவாக்கங்களால் விடுதலைப்புலி அங்கத்துவர்களை கொடுமையான பயங்கரவாதிகள் என்றே நம்புவது வழமை.
ஏன் விடுதலைப்புலிகள் அவர்களது இறுதி முயற்சியாக ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் ? ஏன் தமிழ் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளவும் அவர்களது சொந்த உரிமைக்காக யுத்தம் செய்வதையும் தேர்ந்தெடுத்தார்கள்
அவர்களது தியாகங்களும் அற்பணிப்புகளும் வார்த்தைகளுக்கு அப்பாலானவை. அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்களின் விடுதலைக்காக தங்கள் முழு வாழ்வையும் உவந்தளித்தவர்கள்.
நேர்த்தியான ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பேணியவர்கள் விடுதலைப்புலிகள். இது போன்ற நல்ல கட்டுக்கோப்பான இராணுவத்தினையோ அல்லது அமைப்பினையோ பற்றி நான் ஒருபோதும் பார்த்தோ அல்லது கேட்டோ அறிந்ததில்லை. இதன் வழிகாட்டியான விடுதலைப்புலிகளின் தலைவர் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாலானவர்.
விடுதலைப்புலி வீரர்களது வாழ்வு நெருக்கடிகள் நிறைந்த வேளைகளிலும் பெருமையுடனும் போற்றும் வகையிலும் வாழும் வாழ்க்கையினால் அதன்பால் நான் ஈர்க்கப்படுகிறேன்.
இனப்பிரச்சனை விவகாரத்துக்கு ஒரு போரில்லாத முடிவைப் பெறுவதற்கு உண்மையான நம்பிக்கையுடன் சமாதானப் பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் நுழைந்தார்கள்.
ஆனால் இலங்கையரசாங்கம் குறிப்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதானப் பேச்சுக்களை விடுதலைப்புலிகளுக்கு வைக்கப்படும் ஒரு பொறியாக வடிவமைத்தார்.
விடுதலைப்புலிகளது பலத்தையும் விடுதலைப்புலி வீரர்களது மனோபலத்தையும் சிதைப்பதற்கு மிகவும் வஞ்சகத்தனமும் தந்திரமும் கொண்ட பொறியாக அது வடிவமைக்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் வன்னியில் மனதைக் கவரும் வகையிலான அனைத்து அடிப்படை சமூகக்கட்டமைப்புகளுடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சி செய்தனர். ஆரம்பத்தில் சமாதானம் சீராகச் சென்றுகொண்டிருந்தாலும் சிறிலங்கா அரசின் கோழைத்தனமான யுத்தநிறுத்த மீறல்களால் படிப்படியாக சமாதானம் சீர்குலையத்தொடங்கியது. ஆச்சீர்குலைவுகள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழிகோலியது.
எப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் ?
இலங்கையரசாங்கம் ஒரு லட்சத்து நாற்பதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்களைக் கொன்று ஒரு இரத்தம் தோய்ந்த முடிவையே போரின் மூலம் வழங்கியிருக்கிறது.
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஈவிரக்கமற்று கொல்லப்பட்டார்கள். ஏனையவர்கள் சித்திரவதைகளுக்கும் பாலியல் வல்லுறவகளுக்கும் ஆளானார்கள். இவைகள் எல்லாம் பயங்கரவாதம் இல்லையா ? ஏன் மேற்கு நாடுகள் இப்போதும் மௌனமாயிருக்கிறார்கள் ?
தமிழ்மக்கள் அவர்களது சொந்த உரிமைக்காகவும் சொந்த சுதந்திரத்துக்காகவும் போரிட்டார்கள். விடுதலைப்புலிகளே தமிழ் மக்களது ஒரேயொரு பிரதிநிதிகளாகவும் இருந்தார்களே தவிர பயங்கரவாதிகளாக அல்ல.
தமிழ்மக்கள் சிங்கள மக்களைப் போலவே சுதந்திரத்துடன் கூடிய அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்கு நிறையவே உரிமை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லா வழிகளிலும் எங்களுக்கு (சிங்களமக்களுக்கு) சமமானவர்கள்.
உண்மையில் இனவாத சிங்கள அரசாங்கம் தான் பயங்கரவாதிகளாகவும் போர்க்குற்றவாளிகளாகவும் இருக்கிறார்கள்.
எந்தவொரு உண்மையான பௌத்தனும் நல்ல சிங்களக்குடிமகனும் இன அழிப்பைச் செய்த கடந்தகால தற்கால இலங்கை அரசுடன் ஒருபோதும் ஒத்துப்போகப் போவதில்லை.
நாங்கள் சிங்கள சகோதர சகோதரிகள் அதாவது புத்தரை உண்மையாக பின்பற்றுபவர்கள். உங்களது சுதந்திரத்திற்கான போராட்டத்துடன் உங்களுடன் நாங்களும் நிற்போம் என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment