#vavuniya #jaffna
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்கள்
மற்றும் நெடுந்தீவு மேற்கை சேர்ந்தவர்கள் யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன் சாட்சியமளித்துள்ளார்.
அந்த சாட்சியத்தில் “புகையிரதம் வருகிறதென எச்சரித்தும் சாரதி மாமா காரை செலுத்தினார்” என்ற அதிர்ச்சி தகவலை சிறுவன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த நிலையிலேயே தான் கதவை திறந்து பாய்ந்து தப்பியதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.
வவுனியா - ஓமந்தை பகுதியில் நேற்று காலை காரொன்று, புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இதேவேளை
விபத்தில் படுகாயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் சம்பவத்தின் போது வாகனத்தின் சாரதி மற்றும் வாகனத்தில் பயணித்த சிறுவன் ஆகிய இருவரும் காரிலிருந்து பாய்ந்து எவ்வித காயங்களுமின்றி உயிர்பிழைத்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment