50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 17, 2018

“வெளியில் போனால் பொலிஸ் பிடித்து விடும்“ நேவி சம்பத்தை எச்சரித்து மறைத்து வைத்த கடற்படை தளபதி- சி.ஐ.டி வாக்குமூலம் கசிந்தது!




கொழும்பில் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களிற்கான நீதியை பெற்றுக்கொள்ள, அவர்களின் குடும்பங்களால் நடத்தப்படும் போராட்டத்திற்கு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

2009 செப்ரெம்பரில் கொழும்பு தெஹிவளையில் தமிழ் இளைஞர்கள் ஐவர் காணாமல் போனார்கள்.பிரித்தானிய பல்கலைகழமொன்றில் அனுமதியை பெற்றிருந்த கொட்டாஞ்சேனையை சேர்ந்த நாகநாதன் ரஜீவ் நாகநாதனும், அவரது பயண பிரிவுபசார கொண்டாட்டத்திற்கு சென்ற, நான்கு நண்பர்களுமே காணாமல் போயிருந்தனர். 2008 ஓகஸ்டுக்கும் ஒக்ரோபருக்கும் இடைப்பட்ட காலத்தில் கொழும்பின் புறநகர்களிலிருந்து ஏனைய ஆறு இளைஞர்கள் கடத்தப்பட்டனர்.

ஆரம்பத்தில் இவர்கள் சையித்திய வீதியிலுள்ள  கடற்படை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் திருகோணமலை கடற்படை தளத்திலுள்ள கன்சைட் தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.

செப்ரெம்பர் 17 அவர்களை தேடி, அவர்களின் பெற்றோர் உறவினரால் ஆரம்பித்த நீண்ட போராட்டத்தின் பத்தாவது ஆண்டு நிறைவாகும்.

எனினும், சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் அரசியல், அதிகார செல்வாக்கின் அடிப்படையில் தப்பித்துக் கொண்டிருப்பதே இலங்கையின் துயரமான அரசியல் யதார்த்தமாக உள்ளது.

கூட்டுப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்ண சி.ஐ.டி யினால் வாக்குமூலம் பெற அழைக்கப்பட்டிருந்த நிலையில்,

   
       
   
  சம்பவ தினமாக செப்ரெம்பர் 10ம் திகதி திடீரென மெக்சிக்கோவிற்கு பயணமானார். அன்றையதினம் கூட்டுப்படை பிரதானி அலுவலக அதிகாரியொருவர், சி.ஐ.டி தலைமையகத்திற்கு சென்று கடிதமொன்றை கையளித்திருந்தார். அதில், ரவீந்திர விஜயகுணரட்ண மெக்சிக்கோவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை செய்கிறார், அவர் செப்ரெம்பர் 19ம் திகதி நாடு திரும்பிய பின்னர் பிறிதொரு திகதியில் வாக்குமூலம் வழங்கும் திகதியை குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இதன்பின்னர், அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டிய ஜனாதிபதி- கூட்டுப்படை பிரதானியை குறிவைத்து சி.ஐ.டியினர் நடத்தும் விசாரணை குறித்து கடும் தொனியில் எச்சரிக்கை விட்டிருந்தார். தேடப்படுபவர் ஒருவருக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் கூட்டுப்படை பிரதானியை குறிவைப்பதை நேரடியாக கண்டித்திருந்தார் ஜனாதிபதி.

பின்னர் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலும் இதே கருத்தை பிரதிபலித்திருந்தார். கொலை, கடத்தலில் சம்பந்தப்பட்ட உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும்படியும், ஆனால் அதுவரை அவர்களை கைது செய்து தடுத்து வைக்க அனுமதிக்க போவதில்லையென்றும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

இதுவரை கைதான இராணுவ அதிகாரிகள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இருக்கவில்லை, அவர்களை தடுத்து வைத்து விட்டு பிணையில் விடுவித்ததே நடந்தது என்னும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆற்றல் குறைபாடு, இராணுவத்திடமிருந்து தகவல்களை பெறுவதில் ஒத்துழைப்பின்மை ஆகியன இதற்கான காரணமாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், அப்போதைய கடற்படை தளபதியும், இப்போதைய கூட்டுப்படை பிரதானியுமான ரவீந்திர குணவர்த்தன மீது சி.ஐ.டியினர் பி அறிக்கை இலக்கம் (பி 9527ஃ2018) வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

சி.ஐ.டி யின் தகவலின் பிரகாரம் இளைஞர்கள் கடத்தலின் பிரதான சந்தேகநபரான ஹெட்டியாராச்சியை (நேவி சம்பத்) அப்போதைய கடற்படை தளபதி ரவீந்திர விஜயகுணரட்ண பாதுகாத்துள்ளார்.

மார்ச் 1, மார்ச் 28 ஆகிய திகதிகளில் அந்த சமயத்தில் கடற்படைத் தளபதியாக இருந்த ரவீந்திர விஜய குணரட்னவின் கவனத்திற்காக கடற்படைத் தலைமையகத்தின் நிர்வாக பிரிவுக்கு இரண்டு தகவல்களை சி.ஐ.டியினர் அனுப்பியிருந்தனர். ஹெட்டியாராச்சியை சி.ஐ.டி தலைமையகத்தில் மார்ச் 2 மற்றும் மார்ச் 31 இல் ஆஜராகுமாறு கடற்படையிடம் வேண்டுகோள் விடுத்தே அந்த செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைகள் இறுதிவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆனால் சாட்சிகளும், வாக்குமூலங்களும் இந்த காலகட்டத்தில் கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஹெட்டியாராச்சி தங்கவைக்கப்பட்டிருந்தார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஹெட்டியாராச்சியின் மனைவியினால் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தில் இருந்து இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

2017 மார்ச் 3- மார்ச் 31 இற்கு இடைப்பட்ட காலத்தில் கடற்படை தலைமையகத்திற்கு ஹெட்டியாராய்ச்சியை பார்ப்பதற்காக தான் மூன்று முறை சென்று இருந்ததாக விசாரணையாளர்களிடம் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், இந்த காலகட்டத்தல் ஹெட்யாராச்சி எங்கு இருக்கிறார் என்பதை அறிந்திருக்கவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சி.ஐ.டி விசாரணைக்கு ஒத்துழைத்திருந்த லெப்டினன்ட் கொமாண்டர் கீத்தால் லக்ஸ்ரீயின் வாக்குமூலம், ஹெட்டியாராய்ச்சியின் மனைவியின் வாக்குமூலம் என்பன சி.ஐ.டிக்கு உண்மையை வெளிப்படுத்த உதவிகரமாக இருந்துள்ளது.

சி.ஐ.டி யினர் தேடிக் கொண்டிருந்த தருணத்தில், கடற்படை தலைமையகத்தின் அதிகாரிகளின் உணவகத்தில் தனக்கு அருகில் இருந்த அறையில் ஹெட்டியாராச்சி தங்கியிருந்ததாக கீத்தால் லக்ஸ்ரீ வாக்குமூலமளித்துள்ளார்.

விஜய குணரட்ணவும், ஹெட்டியாராச்சியும் நகரும் படியில் பேசிக்கொண்டு சென்றதை

   
       
   
  பார்த்ததாகவும் லக்ஸ்ரீ கூறி இருந்தார். சி.ஐ.டியின் அறிக்கையின் பிரகாரம், கடற்படை தலைமையக உணவகத்தில் இருந்து ஹெட்டியாராச்சி வெளியேறியதை தான் பார்த்ததாகவும், அச்சமயம் கடற்படைத் தளபதியாக இருந்த விஜய குணரட்ண, அவர் எங்கு போகிறார் என விசாரித்ததாகவும் லக்ஸ்ரீ கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தனது மனைவியை சந்திக்க வெளிச்ச வீட்டுக்கு சென்று கொண்டிருப்பதாக ஹெட்டியாராச்சி பதிலளித்துள்ளார். அதற்கு பதிலளித்த தளபதி- “நீங்கள் இப்படி வெளியில் திரிந்தால் பொலிசார் பிடித்து விடுவார்கள். அதன் பின்னர் என்னால் எதுவும் செய்ய இயலாது“ என்று கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி வலுவான ஆதாரங்கள் கிடைத்த பின்னரே, அப்போதைய கடற்படை தளபதியாக இருந்த இன்றைய கூட்டுபடை தளபதியை விசாரணைக்கு சி.ஐ.டியினர் அழைத்துள்ளனர். எனினும், அவர் தற்காலிக தப்பிக்க இலங்கை நீதி இடமளித்துள்ளது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job