நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, November 1, 2023

கனடா தமிழர்களுக்கு எச்சரிக்கை!! களவாடப்படும் காசோலைகள் !!

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் சிறு வர்த்தகம் ஒன்றில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் தபால் மூலம் அனுப்பி வைத்த காசோலை களவாடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.10,000 டொலர் பெறுமதியான காசோலை இவ்வாறு களவாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய வருமான முகவர் நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்பட்ட காசோலையே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.களவாடப்பட்ட காசோலை வேறும் ஓர் கணக்கில் வைப்பிலிடப்பட்டு பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு பணம் பெற்றுக் கொள்ளப்பட்ட கணக்கு மோசடி செய்வதற்காகவே திறக்கப்பட்ட கணக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.பணத்தை பெற்றுக் கொண்டவுடன் குறித்த கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

கனடிய வருமான முகவர் நிறுவனத்திற்கு தாம் அனுப்பிய காசோலையே இவ்வாறு இடைநடுவில் களவாடப்பட்டு வேறுமோர் கணக்கில் வைப்பிலிட்டு பணமாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.போலியான பெயரொன்றைக் கொண்டு காசோலை பணமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக கனடாவில் இடம் பெற்று வரும் இந்த இந்த மோசடிக்கு காசோலை சலவை (cheque washing) என பெயரிடப்பட்டுள்ளது.குற்றவாளிகள் தபால் மூலம் அனுப்பப்படும் காசோலையை களவாடி அவற்றின் பெயர்கள் இலக்கங்களை மாற்றி மோசடி செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இவ்வாறு காசோலைகள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 45 நாட்களுக்குள் முறைப்பாடு செய்யுமாறு வங்கி வங்கிகள் பொதுமக்களிடம் கோரியுள்ளன.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job