நேற்று காலை 5மணியளவில் யாழ் கொக்குவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த 5 பேர் அடங்கிய குழு ஒன்று கொழும்பு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை அவனது தாயார் முன் வீட்டுக்குள் இருந்து இழுத்து வந்து கடுமையாகத் தாக்கிச் சென்றுள்ளது. தாயார் குடும்பிடக் குடும்பிட தாக்குதல் நடந்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள். இச் சம்பவம் நடந்து கொண்டிருந்த போது அயலவர்களால் தொலைபேசியில் பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொலிசார் அந்த இடத்திற்கு வருவதற்கு முன் மாணவனைத் தாக்கியவர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள்.அந்த இடத்திற்கு பொலிசார் வந்த போது தாக்குதலுக்கு உள்ளான மாணவன் பொலிஸ் முறைப்பாடு அளிக்க மறுத்துவிட்டதாகத் தெரியவருகின்றது. தன்னை தனது நண்பர்கள் தவறுதலாக தாக்கியதாக கூறி பொலிசாரை மாணவன் அனுப்பிவிட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தென் மாகாணப் பதிவு கொண்ட சொகுசு கார் ஒன்றில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என கருதப்படும் 4 ஆண்களும் ஒரு பெண்ணுமே மாணவனை தாக்கியுள்ளார்கள். அதிகாலை வந்த அவர்கள் மாணவனின் வீட்டின் முன் நீண்ட நேரமாக காரிலிருந்து கோர்ன் அடித்து, குறித்த வீட்டில் வசித்து வந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவனின் பெயரை கூறி வெளியே வருமாறு கத்தியபடி இருந்துள்ளார்கள். மாணவன் வீட்டில் இருந்து வெளியே வராததால் கேற் வழியாக ஏறி உள்ளே நுழைந்து அங்கு கலவரம் செய்ததாக தெரியவருகின்றது. அவர்கள் சிங்களத்தில் ஏசி, ஏசியே மாணவன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்கள். அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 17 வயதுக்கும் குறைவான பெண் அல்லது திருமணம் முடித்த ஒரு பெண்ணுடன் குறித்த மாணவன் அந்தரங்கத் தொடர்பை பேணியுள்மை அவர்கள் ஏசும் போது தெரியவந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தீவுப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த மாணவனும் அவனது குடும்பத்தினரும் பல வருடங்களாக கொக்குவில் பகுதியில் வசித்து வருவதாக அயலவர்கள் கூறுகின்றார்கள். மாணவனின் இரு சகோதரிகள் மருத்துவத்துறையில் கல்வி பயின்று திருமணம் முடிந்த பின்னர் தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வருவதாகவும் குறித்த மாணவன் பல்கலைக்கழக இறுதி ஆண்டில் கற்றுவருவதாகவும் மாணவனின் தந்தை கொரோனாவுக்கு இலக்காகி உயிரிழந்தவர் எனவும் தெரியவருகின்றது.
0 comments:
Post a Comment