எம்பிலிபிட்டியவில் ஆசிரியையின் குளியலறையில் நுழைந்தவர்கள் அவரின் கைகளைக் கட்டிவிட்டு நடத்திய சம்பவம்!!
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆசிரியை ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபரொருவர் ஆசிரியையின் கைகளை கட்டி வைத்துவிட்டு வீட்டிலிருந்த 11 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஆசிரியையின் வீட்டின் குளியலறையின் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்துள்ள நிலையில் ஆசிரியையின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் சந்தேக நபர், ஆசிரியையின் கைகளைக் கட்டி வைத்துவிட்டு வீட்டிலிருந்த பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்த 35,000 ரூபாய் பணம் ,6 பவுண் தங்க மாலை,பெண்டன்,வளையல்கள்,2 மோதிரங்கள் மற்றும் காதணிகள் ஆகியவையும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment