யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (4) இந்த சம்பவம் நடந்தது.
கணவன் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் தெல்லிப்பளையில் வசித்து வந்தனர். 16 வயதான மகன் உளநலச் சிக்கல்களுக்குள்ளாகியுள்ளார்.
நேற்று அந்த சிறுவன் கத்தியொன்றை தனது கழுத்தில் வைத்திருந்ததை அவதானித்த பின்னர் சகோதரி அயல் வீட்டில் சென்று இரவு உறங்கினார். காலையில் வீடு திரும்பிய போது, தாயார் வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது உடலில் இரத்த காயங்கள் எதுவும் இல்லை. வாய் பகுதியிலிருந்து குருதி வெளியேறியிருந்தது. அந்த பெண் எழுதியதாக குறிப்பிடப்படும் தற்கொலை குறிப்பொன்றும் அங்கு காணப்பட்டது.
இதேவேளை, வீட்டு சுவரில் இரத்தத்தால் சில வாசகங்களும் எழுதப்பட்டுள்ளது.
அத்துடன், உளநல சிக்கலுக்குள்ளான சிறுவனும் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார்.
தெல்லிப்பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment