சுவிஸ் முதியவர் ஒருவரை ஏமாற்றிப் பணம் பறிக்க முயன்றது ஒரு கூட்டம். ஆனால், தனது சமயோகித புத்தியால் ஒரு மோசடிக்கூட்டத்தையே பொலிசில் சிக்கவைத்துள்ளார் அந்த முதியவர்.
ஏமாற்ற முயன்ற மோசடியாளர்கள்
சூரிச் மாகாணத்தில் வாழ்ந்துவந்த முதியவர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டு, நீங்கள் சமீபத்தில் வங்கியில் டெபாசிட் செய்த பணத்தில் சில நோட்டுகள் கள்ள நோட்டுகள் உள்ளன, அவற்றை எடுத்து உங்கள் வீட்டுக்கு வரும் பொலிசாரிடம் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
அப்படியே செய்கிறேன், ஆளை அனுப்புங்கள் என்று கூறிய அந்த 79 வயது முதியவர், உடனடியாக பொலிசாரை அழைத்து விடயத்தைக் கூறியுள்ளார்.
Fraudsters Face Charges After Tip Off
பணம் கிடைக்கும் என நம்பி வந்த மோசடியாளர்
அந்த முதியவர் பணம் தருவார் என நம்பி வந்த மோசடியாளர், தயாராக காத்திருந்த பொலிசாரிடம் சிக்கிக்கொண்டார். அவருடன், அவரது கூட்டாளிகளான ஒரு பெண் உட்பட மூன்று பேரையும் பொலிசார் கைது செய்துள்ளார்கள். அவர்களிடமிருந்து, சுமார் அரை மில்லியன் ஃப்ராங்குகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள்.
அந்த முதியவரின் சமயோகித புத்தியால், ஒரு கூட்டம் மோசடியாளர்கள் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்!
0 comments:
Post a Comment