நடப்பு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக களமிறங்கிய இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த்(Vijayakanth Viyashkanth) தனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடிய அவர், ஆட்டத்தின் முடிவில் தனது முகப்புத்தக பதிவில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தனது பதிவில் அவர், “என்னுடைய அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.
நீங்கள் அனைவரும் என் பக்கத்தில் நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த ஆதரவை நான் என்றும் மறக்க மாட்டேன். இந்த வாய்ப்பை வழங்கிய சன்றைசஸ் அணிக்கு எனது நன்றி.
Viyashkanth Ipl Debut Today
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது எல்லையற்ற நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்." என கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. லக்னோ அணி நிர்ணயித்த 165 ஓட்டங்களை 9.4 ஓவர் நிறைவில் கடந்து வெற்றியை பதிவு செய்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு 166 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் இன்னிங்ஸ் முடிவில், லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றது.
லக்னோ அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஆயுஷ் பதோனி 30 பந்துகளில் 55 ஓட்டங்களையும் நிக்கலஸ் பூரன் 26 பந்துகளில் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
Viyashkanth Ipl Debut Today
சன்ரைசர்ஸ் அணி சார்பில், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுக்களையும் பட் கம்மின்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணி சார்பாக தனது முதலாவது போட்டியில் களமிறங்கிய விஜயகாந்த் வியாஸ்காந்த், விக்கெட் எதனையும் பெறாவிட்டாலும் சிறப்பாக பந்துவீசி குறைந்தளவான ஓட்டங்களையே விட்டுக்கொடுத்தார்.
போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய வியாஸ்காந்த், 27 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து லக்னோ அணியின் துடுப்பெடுத்தாளர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தினார்.
0 comments:
Post a Comment