யாழ்ப்பாணத்தில் (Jaffna) வீட்டினுள் வைத்து கஞ்சா செடியினை வளர்த்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்றையதினம் (10.5.2024) யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் பத்திரகாளி கோவில் அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மேலதிக விசாரணை
யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜெகத் விசாந்த தலைமையிலான யாழ். மாவட்ட காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனையை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது வீட்டில் 8 அடி 700 cm நீளமான கஞ்சா செடியினை வளர்த்த 46 வயதான வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment