தனது பதினான்கு வயது மகளை பாலி யல் பலா த்காரம் செய்த குற்றத்திற்காக நாற்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர், கடந்த ஆறு ஆண்டுகளாக நீதிமன்றத்தை தவிர்த்து வந்த தந்தை கைது செய்ய்பட்டுள்ளார்.
அம்பாறை பகுதியில் பதுங்கியிருந்தவரின் காதில் இருந்த ஒரு பழைய வெட்டுக்காய அடையாளத்தால் அடையாளம் காணப்பட்டார்
அம்பலாங்கொட குளிகொட கலகொட நியூ கொலனியைச் சேர்ந்த ரன்னுலு எடின் டி சில்வா என்ற தந்தையே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்றத்தை தவிர்த்ததன் காரணமாக, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் இருபத்தி இரண்டாம் நாள், இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு தண்டனை வழங்கி வழக்கு முடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் குற்றச்சாட்டிற்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனையும், இருபதாயிரம் ரூபாய் அபராதமும், தவறினால் ஆறு மாத சிறை தண்டனையும், இரண்டாவது குற்றச்சாட்டில் இருபது ஆண்டுகள் சிறை தண்டனையும், இருபதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அபராதம் செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதைச் செலுத்தாவிட்டால், மூன்று ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
அம்பாறையில் கைதானவர் பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்கவிடம் ஆஜர்படுத்தியதன் பின்னர் நேற்று முன்தினம் (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதே தண்டனையை விதித்தார்.
சந்தேக நபர் அம்பாறை புளுகுணாவ, மங்களகம பிரதேசம் மற்றும் பலாங்கொடை போன்ற பகுதிகளில் பொய்யான பெயர்களில் வசித்து வருகிறார் என பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, மாறுவேடத்தில் அங்கு சென்று தகவல் திரட்டிய பொலிசார், தமக்கு கிடைத்த தகவல் சரியானது என்பதை உறுதி செய்தனர்.
கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட தகவலறிந்தவரின் உதவியுடனும் பொலிசார் சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அந்த நபர் தன் மீதான குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டு என நிராகரிக்கப்பட்ட போது, விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறை படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபரின் வலது காதில் உள்ள பழைய வெட்டுக் குறியின் பிரகாரம், அவர்தான் சந்தேகநபர் என்பதை உறுதிசெய்து விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதன்படி சந்தேகநபரை கடந்த 5ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறும், பின்னர் மொனராகலை சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாக பலப்பிட்டிய நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் (08) பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க இதற்கு முன்னர் வழங்கிய தீர்ப்பை வழங்கியிருந்தார் தீர்ப்பை கூறிய அவர், காதில் இருக்கும் அடையாளத்தால் சிக்கியதாக கூறினார்.
0 comments:
Post a Comment