புத்தளம் ஆனமடுவ, கன்னங்கர மாதிரிக் கல்லூரியில் சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் குழுவொன்று பாடசாலை மைதானத்தை சேதப்படுத்தியுள்ளதாக ஆனமடுவ கால்துறையினர் தெரிவித்தனர்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய கன்னங்கரா மாதிரிக்கல்லூரி மாணவர்கள் குழுவொன்று பூந்தொட்டிகளை உடைத்தும், பாடசாலை மைதானத்தில் உள்ள வாழை மரங்களை வேரோடு பிடுங்கியும், கூரைகளை சேதப்படுத்தியும் உள்ளமை காவல்துறை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிகவும் கீழ்த்தரமான முறையில்
குறித்த மாணவர் குழு மிகவும் கீழ்த்தரமான முறையில் பாடசாலை வளாகத்தை சேதப்படுத்தியுள்ளதாக ஏனைய மாணவர்கள் அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் அதிபர் விமல் விஜயரத்ன, சேதங்களை ஏற்படுத்திய மாணவர் குழுவை அடையாளம் கண்டு காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் ஆனமடுவ காவல் நிலையத்திற்கு அழைத்த பொறுப்பதிகாரி மாணவர்களினால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் தொடர்பான அனைத்தையும் மீண்டும் திருப்பி கொடுக்குமாறு கடும் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
ஒரு சிலரே இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாக
இந்த வருடம் கன்னங்கரா கல்லூரியில் இருந்து ஏறக்குறைய 220 மாணவர்கள் பரீட்சையில் பங்குபற்றியிருந்த நிலையில் அவர்களில் ஒரு சிலரே இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கன்னங்கர வித்தியாலயத்தின் பெயருக்கு இம்மாணவர்கள் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக ஏனைய மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment