இலங்கையிலும் இலங்கையைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக காற்றும் மழையுடனுமான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் நன்பகல் 12 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
மழையுடனுமான வானிலை
மத்திய, சப்ரகமுவ, மேல்,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Today Weather Srilanka In Tamil
நாட்டை சூழஉள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
இன்று மாலை முதல் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும்.
காற்று வேகம்
குறிப்பாக கொழும்பு தொடக்கம் காலி ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும்.
Today Weather Srilanka In Tamil
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment