ஈழத்து மருமகள் நடிகை ரம்பா நடிப்பினால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர்.
பிரபல நடிகை ரம்பாவுக்கும், யாழ்பாணத்தை பூர்விகமாக கொண்ட கனேடிய தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
ரஜினி, கமல் என அவர் நடித்த காலத்தில் முன்னணியில் இருந்த அனைத்து ஹீரோக்களுடனுமே டூயட் ஆடியவர், பின்னாளில் திருமணம் ஆனதும் நடிப்பிற்கு டாட்டா காட்டி விட்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்ரியவர், தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரம்பா குறித்து சில வதந்திகள் பரவியது. வதந்திகளை பொய்யாக்கும் வகையில் ரம்பாவின் மூன்றாவது வளைகாப்பு நிகழ்ச்சி கனடாவில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு ஏற்கனவே லாவண்யா, சம்பா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிகழ்வில் பல்வேறு திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment