திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு மெரினா கடற்கரையில் இடம் கிடையாது என்று எழுந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திமுக தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெரினாவில் அண்ணா நினைவிடத்தின் வலது புறத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலைஞரின் உடல் 4 மணி அளவில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதத்தில் தலைவர் அண்ணா அருகில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.பல சாதணைகள், போராட்டம் மூலம் அனைத்தையும் வென்று காட்டியவர். தான் இரந்தும் போராட்டத்தை விடாமல் வென்ற தலைவர் கருணாநிதி உடல் இன்று தகணம் செய்யப்படுகின்றது
0 comments:
Post a Comment