லண்டனில் ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்ணின் புகைப்படம் முதன்முறையாக வெளியாகியுள்ளதுடன், மற்றொரு முக்கிய தகவலும் வெளியாகியுள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த தகவல்
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.10 மணியளவில், லண்டனிலுள்ள Croydonஇல் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.
ஆம்புலன்ஸ், மருத்துவ உதவிக்குழுவினருடன் விரைந்த பொலிசார், அந்த வீட்டில் 19 வயது இளம்பெண் ஒருவர், கத்திக்குத்துக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
Yahoo News UK
உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவ உதவிக்குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
யார் அந்தப் பெண்?
இந்நிலையில், அந்தப் பெண்ணின் பெயர் மேஹாக் ஷர்மா (Mehak Sharma) என்றும், சமீபத்தில்தான் அவர் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
புதிய தகவல்
இந்த துயர சம்பவம் தொடர்பாக, அதே வீட்டிலிருந்த 23 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டடார். அவருடைய பெயர் சாஹில் ஷர்மா (Sahil Sharma) என்றும், அவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமானவர் என்றும் முன்னர் கூறப்பட்டது.
இந்நிலையில், சாஹில், மேஹாக் ஷர்மாவின் கணவர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. வாழ்வு துவங்கும் நேரத்திலேயே, வெறும் 19 வயதேயான அந்தப் பெண்ணை எதற்காக அவரது கணவர் கொலை செய்தார் என்பது தெரியவில்லை.
சாஹில் ஷர்மா மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அவர் Old Bailey நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
பொலிசார் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாராவது இந்த வழக்கு தொடர்பில் சந்தேகத்துக்குரிய வகையில் எதையாவது பார்த்திருந்தால், அல்லது கேட்டிருந்தால் உடனே தங்களுக்கு தெரிவிக்க முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
0 comments:
Post a Comment