நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, November 3, 2023

தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Exchange Rate At Banks Today


தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : இன்றைய நாணயமாற்று வீதம்!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (03) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 65 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 334 ரூபா 13 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபா 64 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 409 ரூபா 35 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபா 29 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 357 ரூபா 11 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 92 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 244 ரூபா 70 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Exchange Rate At Banks Today

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206 ரூபா 52 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 216 ரூபா 91 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 236 ரூபா 08 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 246 ரூபா 77 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

வங்கிகளில் இன்றைய நிலவரம்

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.40 ரூபாயிலிருந்து 322.38 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  333.17 ரூபாயிலிருந்து 334.19 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.64 ரூபாயிலிருந்து 322.63 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332 ரூபாயிலிருந்து 333 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 323 ரூபாயிலிருந்து  324 ரூபாய் மற்றும் 333 ரூபாயிலிருந்து 334 ரூபாயாகவும் மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment